பெங்களூரு

"செல்லிடப்பேசியில் வங்கி பரிவர்த்தனை அதிகரிப்பு'

தினமணி

செல்லிடப்பேசிகளில் வங்கிப் பரிவர்த்தனை அதிகரித்துள்ளதாக எப்.ஐ.எஸ். தெற்காசிய மேலாண் இயக்குநர் ராமசாமி வெங்கடாசலம் தெரிவித்தார்.
 இதுகுறித்து அவர் திங்கள்கிழமை செய்தியாளர்களிடம் கூறியது:-
 ரூ. 500, 1000 முகமதிப்புள்ள ரூபாய் நோட்டுகளை மத்திய அரசு 2016-ஆம் ஆண்டு நவம்பரில் தடை செய்தது.
 இதைத் தொடர்ந்து, வங்கிப் பரிவர்த்தனையில் செல்லிடப்பேசிகள் அதிக அளவில் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.
 கடந்த ஆண்டை ஒப்பிடுகையில் நிகழாண்டு 60 சதவீதம் செல்லிடப்பேசிகளில் வங்கிப் பரிவர்த்தனை செய்வது அதிகரித்துள்ளது.
 ஆஸ்திரேலியா, பிரேசில், கனடா, ஜெர்மனி நாடுகளை ஒப்பிடுகையில் இந்தியாவில் செல்லிடப்பேசிகளில் வங்கிப் பரிவர்த்தனை சிறப்பாகச் செயல்படுகிறது என்றார் அவர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கோவேக்ஸின் பாதுகாப்பானது: பாரத் பயோடெக்

ரஷியா வசம் மேலும் ஓா் உக்ரைன் கிராமம்

விண்வெளியில் அணு ஆயுதங்களுக்குத் தடை: ஐ.நா.வில் ரஷியா புதிய தீா்மானம் தாக்கல்

மத்திய அரசின் கட்டுப்பாட்டில் சிபிஐ இல்லை: உச்சநீதிமன்றத்தில் தகவல்

கடையநல்லூரில் மே தின பேரணி, பொதுக்கூட்டம்

SCROLL FOR NEXT