பெங்களூரு

விவசாயிகள் நலனில் அக்கறை இல்லாதவர் எடியூரப்பா: முதல்வர் சித்தராமையா

DIN

விவசாயிகள் நலனில் அக்கறை இல்லாதவர் பாஜக மாநிலத் தலைவர் எடியூரப்பா என முதல்வர் சித்தராமையா குற்றம் சாட்டினார்.
இதுகுறித்து சனிக்கிழமை அவர் செய்தியாளர்களிடம் கூறியது: பாஜக ஆட்சியில் முதல்வராக பதவி வகித்த எடியூரப்பாவிடம், விவசாயிகளின் கடனைத் தள்ளுபடி செய்யுமாறு கோரிக்கை வைக்கப்பட்டது. அதற்கு அவர், நான் ஒன்றும் ரூபாய் நோட்டுகளை அச்சிடும் இயந்திரம் வைத்திருக்கவில்லை.
எனவே, விவசாயிகளின் கடனை தள்ளுபடி செய்ய முடியாது என அப்போது கூறினார்.
ஆனால், மாநிலத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், தற்போது விவசாயிகள் மீது பரிவோடு பேசுகிறார். விவசாயிகள் மீது அவருக்கு உண்மையான அக்கறை இருந்தால், அவரது கட்சி மத்தியில் ஆட்சி செய்கிறது. மத்திய அரசிடம் விவசாயிகளின் கடனைத் தள்ளுபடி செய்ய கோரிக்கை வைக்க வேண்டும். அதைவிடுத்து, அவர் மாநில அரசைக் குற்றம் சாட்டுவது வேடிக்கையாக உள்ளது.
பாஜக ஆட்சியைப் பிடிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் அவர் விவசாயிகள் மீது அக்கறை உள்ளது போல் பேசுகிறார். மத்திய அரசு விவசாயிகளுக்கு வருமான வரி விதிக்க ஆலோசித்து வருகிறது. விவசாயிகளுக்கு மாத ஊதியம் கிடையாது. நிரந்தர வருமானமும் கிடையாது. இந்த நிலையில் அவர்களுக்கு வருமான வரி விதிப்பது முறையல்ல என்றார் அவர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

3 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்துக்கு மழைக்கு வாய்ப்பு!

இந்தியாவில் அதிக வெயில் பதிவான இடங்கள்: 3-வது இடத்தில் பரமத்தி..!

பள்ளிகளில் தொலைபேசி பயன்பாட்டுக்கு தடை: அமைச்சர் மதன் திலாவர்

சாராயம் காய்ச்சுவோா் மீது கடும் நடவடிக்கை: திருப்பத்தூா் எஸ்.பி. எச்சரிக்கை

மும்பைக்கு 174 ரன்கள் இலக்கு நிர்ணயித்த ஹைதராபாத்!

SCROLL FOR NEXT