முகப்பு
பெங்களூரு

மகதாயி ஆற்றுநீர் பிரச்னையை  தீர்க்காவிட்டால் போராட்டத்தின் வடிவம் மாறும்: வாட்டாள் நாகராஜ்

மகதாயி ஆற்றுநீர் பிரச்னையில் பிரதமர் தலையிட்டு தீர்க்கவேண்டும்.  இல்லையென்றால்,  போராட்டத்தின் வடிவம் மாறும் என்று கன்னட சங்கங்களில் கூட்டமைப்பின் தலைவர் வாட்டாள் நாகராஜ் தெரிவித்தார்.

Updated On : 30 ஜனவரி, 2024 at 12:10 PM
பகிர்:

மகதாயி ஆற்றுநீர் பிரச்னையில் பிரதமர் தலையிட்டு தீர்க்கவேண்டும்.  இல்லையென்றால்,  போராட்டத்தின் வடிவம் மாறும் என்று கன்னட சங்கங்களில் கூட்டமைப்பின் தலைவர் வாட்டாள் நாகராஜ் தெரிவித்தார்.
பெங்களூரு சுதந்திரப் பூங்காவில் ஞாயிற்றுக்கிழமை மகதாயி விவகாரத்தில் பிரதமர் தலையிட வலியுறுத்தி,  வாட்டாள் நாகராஜ் தலைமையில் கன்னட சங்கங்களின் கூட்டமைப்பை சேர்ந்தவர்கள் கருப்பு பட்டை அணித்து ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.  இதில் கலந்து கொண்டு அவர் பேசியது:  மகதாயி பிரச்னையை தீர்க்க வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறோம்.  இதில் பிரதமர் தலையிட வேண்டும்.  மறுக்கும் பட்சத்தில் போராட்டத்தின் வடிவத்தை மாற்றி தொடர்ந்து போராட முடிவு செய்துள்ளோம்.  மகதாயி விவகாரத்தில் பிரதமரை தலையிட வலியுறுத்தி நாங்கள் போராடுவதற்கு காங்கிரஸ் அரசு பின்னணியில் உள்ளதாக பாஜகவினர் குற்றம் சாட்டி வருகின்றனர்.  இதில் உண்மையில்லை.  பாஜகவினர் தங்கள் மனநிலையை மாற்றிக் கொள்ள வேண்டும். பெங்களூரு வந்துள்ள பிரதமர் மோடி, மகதாயி பிரச்னை குறித்து பேசவில்லை என்றால்,  கன்னட சங்கங்களின் கூட்டமைப்பு திங்கள்கிழமை ஆலோசனைக் கூட்டம் நடத்தி, அடுத்தக் கட்ட போராட்டம் குறித்து முடிவு எடுப்போம் என்றார் அவர்.
 

முழு கட்டுரையைப் படிக்க →