முகப்பு
பெங்களூரு

சட்டப்பேரவைக் கூட்டத் தொடர்: விதான செளதாவைச் சுற்றி 144 தடை உத்தரவு

திங்கள்கிழமை (பிப். 5) முதல் விதான செளதாவில் சட்டப்பேரவைக் கூட்டத் தொடர் நடைபெறவதையொட்டி, 2 கி.மீ சுற்றளவில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Updated On : 30 ஜனவரி, 2024 at 12:10 PM
பகிர்:

திங்கள்கிழமை (பிப். 5) முதல் விதான செளதாவில் சட்டப்பேரவைக் கூட்டத் தொடர் நடைபெறவதையொட்டி, 2 கி.மீ சுற்றளவில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
 இது குறித்து மாநகர காவல் ஆணையர் சுனில்குமார் வெளியிட்டுள்ள செய்தி அறிக்கை:  பெங்களூரு விதான செளதாவில் உள்ள சட்டப்பேரவையில் பிப். 5-ஆம் தேதி தொடங்கி 9-ஆம் தேதிவரை சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் நடைபெற உள்ளது.  இதனையொட்டி  5-ஆம் தேதி காலை 6 மணி முதல் 9-ஆம் தேதி இரவு 12 மணிவரை விதான செளதாவைச் சுற்றியுள்ள 2 கி.மீ.  பரப்பளவில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.  தடை உத்தரவின் போது,  அப் பகுதியில் 5 பேருக்கு மேல் இணைந்து செல்வதோ,  பொதுக்கூட்டம், போராட்டம், ஊர்வலம்,  தர்னா நடத்துவதோ கூடாது.  மேலும்,  ஆயுதங்கள், வெடிபொருள்கள் கொண்டு செல்லவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.  தடையை மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.

முழு கட்டுரையைப் படிக்க →