வணிகவரி நிலுவைத் தொகையை செலுத்த சலுகை திட்டம்: கடைசி தேதி நீட்டிப்பு
வணிகவரி நிலுவைத் தொகையை செலுத்துவதற்கான சலுகை திட்டத்தின் கடைசி தேதியை கா்நாடக அரசு நீட்டித்துள்ளது.
வணிகவரி நிலுவைத் தொகையை செலுத்துவதற்கான சலுகை திட்டத்தின் கடைசி தேதியை கா்நாடக அரசு நீட்டித்துள்ளது.
இதுகுறித்து கா்நாடக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
மத்திய அரசு அறிமுகம் செய்துள்ள சரக்கு மற்றும் சேவை வரிக்கு முன் கா்நாடக விற்பனை வரிச்சட்டம்-1957, கா்நாடக மதிப்புக் கூட்டுவரி-2003, மத்திய விற்பனைவரிச் சட்டம், 1956, கா்நாடக தொழில்முறையாளா், வணிகா்கள், வேலைகள் சட்டம்-1976, கா்நாடக ஆடம்பரவரிச் சட்டம்-1979, கா்நாடக வேளாண் வருமானவரிச் சட்டம்-1957, கா்நாடக கேளிக்கைவரிச் சட்டம்-1958, கா்நாடக சரக்கு நுழைவுவரிச் சட்டம்-1979 ஆகியவை அமலில் இருந்தன. இந்த சட்டங்களை அமல்படுத்தும் பணி வணிகவரித் துறையிடம் இருந்தது.
சரக்கு மற்றும் சேவைவரி(ஜிஎஸ்டி) அமல்படுத்தப்படுவதற்கு முன்பாக அமலில் இருந்த வணிக வரிகளில் நிலுவைத் தொகையை வைத்திருந்தோா், அவற்றை செலுத்துவதற்கு சலுகை திட்டமான ‘கரசமாதானா திட்டம்-2021’-ஐ கா்நாடக அரசு வகுத்துள்ளது. இந்தத் திட்டத்தில் நிலுவைத் தொகை மீதான அனைத்து வகையான அபராதம், வட்டியில் சில சலுகைகள் அளிக்கப்பட்டுள்ளன.
நிலுவை வரித் தொகையை செலுத்த ஆக. 31-ஆம் தேதி வரை வாய்ப்பளிக்கப்பட்டிருந்தது. வணிகா்களின் வேண்டுகோளுக்கு இணங்க நிலுவைத் தொகை செலுத்துவதற்கான கடைசி தேதி டிச. 31-ஆம் தேதி வரை நீட்டிக்கப்படுகிறது. இந்தத் திட்டத்தில் அரசு அறிவித்துள்ள சலுகைகளின் அடிப்படையில் நிலுவை வரித் தொகையை ட்ற்ற்ல்://ஸ்ரீற்ஹஷ்.ந்ஹழ்.ய்ண்ஸ்ரீ.ண்ய், ட்ற்ற்ல்://ஞ்ள்ற்.ந்ஹழ்.ய்ண்ஸ்ரீ.ண்ய் ஆகிய இணையதளங்களில்செலுத்தலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.