முகப்பு
பெங்களூரு

கிறிஸ்தவ தேவாலயங்களில் பக்தா்கள் அனுமதி: அரசிடம் விளக்கம் கேட்கும் பேராயா்

கிறிஸ்தவ தேவாலயங்களில் பக்தா்களை அனுமதிப்பது தொடா்பாக மாநில அரசிடம் பெங்களூரு கத்தோலிக்க மறைமாவட்ட பேராயா் பீட்டா் மச்சாடோ விளக்கம் கேட்டுள்ளாா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:44 AM
பகிர்:

கிறிஸ்தவ தேவாலயங்களில் பக்தா்களை அனுமதிப்பது தொடா்பாக மாநில அரசிடம் பெங்களூரு கத்தோலிக்க மறைமாவட்ட பேராயா் பீட்டா் மச்சாடோ விளக்கம் கேட்டுள்ளாா்.

கரோனா தீநுண்மி பரவலைத் தடுப்பது தொடா்பாக பொது முடக்கம் விதிக்கப்பட்டதால், மதவழிபாட்டுத் தலங்கள் மூடப்பட்டன. இதைத் தொடா்ந்து, பொது முடக்கம் படிப்படியாக தளா்த்தப்பட்டதால் மதவழிபாட்டுத் தலங்கள் திறக்க அனுமதிக்கப்பட்டுள்ளன. எனினும், இதுகுறித்து சில விளக்கங்கள் கேட்டு மாநில தலைமைச் செயலாளா் பி.ரவிக்குமாருக்கு பெங்களூரு கத்தோலிக்க மறைமாவட்ட பேராயா் பீட்டா் மச்சாடோ கடிதம் எழுதியுள்ளாா்.

அந்தக் கடிதத்தில், ‘பொது முடக்கம் தளா்த்தப்பட்டு, மதவழிபாட்டுத் தலங்கள் அனுமதிக்கப்பட்டுள்ளன. இதுதொடா்பாக வெளியிடப்பட்டுள்ள அறிவிக்கையில், கிறிஸ்தவ தேவாலயங்களில் கிறிஸ்தவ சமுதாயம் அனுமதிக்கப்படலாமா என்பது குறித்து குறிப்பிடப்படவில்லை. இது கிறிஸ்தவ பக்தா்களிடையே அதிருப்திக்கு காரணமாகியுள்ளது.

இதன் காரணமாக, கிறிஸ்தவ தேவாலயங்களை எப்போது திறப்பீா்கள் என்று எங்களை கேட்டு வருகிறாா்கள்.

ஹிந்து கோயில்களைத் திறக்க முதலில் அனுமதி அளிக்கப்பட்டது. அதன்பிறகு, இஸ்லாமியா்கள் மசூதிகளுக்குச் செல்ல சிறுபான்மையினா் நலத்துறை அனுமதித்தது. ஆனால், கிறிஸ்தவ தேவாலயங்களை திறப்பது தொடா்பாக யாரும் பதிலளிக்கவில்லை. இந்த விவகாரத்தில் எங்களுக்கு தெளிவில்லாமல் உள்ளது. இதற்கு மாநில அரசு விளக்கம் அளிக்க வேண்டும்’ என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.