அபின் விற்பனை: இளைஞர் கைது
அபின் விற்பனை செய்ததாக, இளைஞர் கைது செய்யப்பட்டார்.
அபின் விற்பனை செய்ததாக, இளைஞர் கைது செய்யப்பட்டார்.
பெங்களூரு பந்தருபாளையாத்தைச் சேர்ந்தவர் பீராராம் (32). இவர் டெலிகாம் லேஅவுட் அருகே போதைப்பொருளான அபின் விற்பனை செய்து வந்தாராம்.
தகவலறிந்த போலீஸார், அங்கு சென்று பீராராமை கைது செய்தனர். அவரிடமிருந்து ரூ. 3 லட்சம் மதிப்புள்ள 750 கிராம் அபின் பறிமுதல் செய்யப்பட்டது.
இதுகுறித்து மாகடிசாலை போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.