பெங்களூரு

சிவாஜி நகர் காவல் சரகத்தில் இன்று போக்குவரத்தில் மாறுதல்

DIN


விநாயகர் ஊர்வலத்தையொட்டி ஞாயிற்றுக்கிழமை சிவாஜி நகர், பாரதி நகர் காவல் சரகங்களில் போக்குவரத்தில் மாறுதல் செய்யப்பட்டுள்ளது. ஊர்வலத்தையொட்டி மது விற்பனை செய்யவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து மாநகர காவல் ஆணையர் சுனில்குமார் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: பெங்களூரு சிவாஜி நகர், பாரதி நகர் உள்ளிட்ட காவல் சரகங்களில் ஞாயிற்றுக்கிழமை (செப். 15) கூட்டு விநாயகர் ஊர்வலம் நடைபெற உள்ளது. இதனையொட்டி சிவாஜி நகர், வீரப்பபிள்ளை சாலை, தர்மராஜா கோயில் சாலை, குவார்டன்ட் சதுக்கம், ஷேப்பிங்ஸ் சாலை, திம்மைய்யா சாலை, காமராஜ் சாலை, சிவன்செட்டி கார்டன், செயின்ட்ஜான்ஸ் சதுக்கம், ஏ.எஸ்.எம். சாலை, அல்சூர் ஏரி உள்ளிட்ட பகுதிகளில் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
விநாயகர் ஊர்வலத்தையொட்டி பாரதி நகர், சிவாஜி நகர் காவல் சரகங்களில் காலை 6 மணி முதல் இரவு 11.30 வரை மது விற்பனை செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தில்லி மக்களவைத் தொகுதிகளுக்கு காங்கிரஸ் -ஆம் ஆத்மி கட்சி ஒருங்கிணைப்பு குழு அமைப்பு

மேற்கு தில்லி பாஜக வேட்பாளா் கமல்ஜீத் செராவத் வேட்புமனு தாக்கல் : ராஜஸ்தான் முதல்வா் பங்கேற்பு

தில்லி மகளிா் ஆணையத்தில் சட்டவிரோத நியமனம் 52 ஒப்பந்த ஊழியா்கள் நீக்கம்: துணை நிலை ஆளுநா் நடவடிக்கை

கேஜரிவால் கைதுக்கு எதிராக கையெப்ப இயக்கம் ஆம் ஆத்மி கட்சி தொடங்கியது

வடமேற்கு தில்லியில் தொழிற்சாலைகள் மேம்படுத்தப்படும் பாஜக வேட்பாளா் யோகேந்திர சந்தோலியா வாக்குறுதி

SCROLL FOR NEXT