பெங்களூரு

வாக்குப் பெட்டிகளுடன் செல்லும் வாகனங்களில் கண்காணிப்பு சாதனம்

DIN

வாக்குப் பெட்டிகளைக் கொண்டு செல்லும் வாகனங்களில் கண்காணிப்பு சாதனம் பொருத்தத் திட்டமிட்டுள்ளதாக பெங்களூரு ஊரக மாவட்ட ஆட்சியர் விஜயசங்கர் தெரிவித்தார்.
இதுகுறித்து திங்கள்கிழமை செய்தியாளர்களிடம் அவர் கூறியது: பெங்களூரு உள்பட மாநிலத்தின் 14 தொகுதிகளில் ஏப். 18-ஆம் தேதி முதல்கட்ட வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. பெங்களூரு ஊரகத் தொகுதியில் தேர்தலுக்கான ஏற்பாடுகள் சிறப்பாக செய்யப்பட்டுள்ளது. தேர்தலுக்கு 24 மணி நேரத்திற்கு முன்பாக வாக்குச்சாவடிகளில் அனைத்து ஏற்பாடுகளை செய்து கொள்ள வேண்டும் என்று தேர்தல் பணி மேற்கொள்பவர்களுக்கு தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. வாக்குப்பெட்டிகளைக் கொண்டு செல்லும் வாகனங்களில் கண்காணிப்பு சாதனம் பொருத்த திட்டமிட்டுள்ளோம். தேர்தலை நேர்மையாகவும், சிறப்பாக நடத்தவும் திட்டமிட்டுள்ளோம் என்றார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சென்னை கடற்கரை - வேலூர் மின்சார ரயில் திருவண்ணாமலை வரை நீட்டிப்பு!

இந்திய பயணத்தை ஒத்திவைத்த எலான் மஸ்க், சீனா சென்றது ஏன்?

லக்னௌ தொகுதியில் வேட்புமனு தாக்கல் செய்தார் ராஜ்நாத் சிங்!

கனமழை எதிரொலி: கென்யாவில் மேலும் ஒரு வாரத்திற்கு பள்ளிகள் விடுமுறை!

டி20 உலகக் கோப்பை: நியூசிலாந்து அணி அறிவிப்பு

SCROLL FOR NEXT