பெங்களூரு

திறமையுள்ள ஏழை பொறியியல் மாணவிகளை ஊக்குவிக்கத் திட்டம்

DIN


 திறமையுள்ள ஏழை பொறியியல் மாணவிகளை ஊக்குவிக்க திட்டமிட்டுள்ளதாக கூகுள் இந்தியா குழுமத்தின் பொறியியல் இயக்குநர் ஆனந்த் ரங்கராஜன் தெரிவித்தார்.
பெங்களூரில் புதன்கிழமை திறமையுள்ள ஏழை மாணவிகளைக் கண்டறியும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு அவர் பேசியது: உலக அளவில் திறமையுள்ள மென்பொறியாளர்களைக் கண்டறிந்து, ஊக்கப்படுத்தத் திட்டமிட்டுள்ளோம். குறிப்பாக பொறியியல் பயிலும் ஏழை மாணவிகள் 600 பேரை கண்டறிந்து அவர்களுக்கு ரூ. 1 லட்சம் வரை கல்வி உதவித்தொகை வழங்கி, தேவையான பயிற்சி அளித்து ஊக்குவிக்க முடிவு செய்துளோம். 
வளர்ந்து வரும் உலக தொழில்நுட்பத்தில் ஆண்களுக்கு இணையாக பெண்களும் வளர்ச்சி அடைய வேண்டும் என்ற நோக்கில் நாங்கள் புதுமுயற்சியை தொடங்கியுள்ளோம். எங்களின் இந்த முயற்சிக்கு டேலன்ட்ஸ்பிரின்ட் ஒத்துழைப்பு வழங்குவதாக உறுதி அளித்துள்ளது என்றார். நிகழ்ச்சியில் டேலன்ட்ஸ்பிரின்ட் குழுமத்தின் மூத்த செயல் அதிகாரி சந்தானுபால் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

”தாலி அணியாத பிரியங்கா காந்தி..” -ம.பி. முதல்வர் விமர்சனம்

4-வது இடத்தில் சிறப்பாக செயல்படும் ஜடேஜா: சிஎஸ்கே பேட்டிங் பயிற்சியாளர்

பெங்களூரில் ’டிசிஎஸ் உலக மாரத்தான்’ ஓட்டப்போட்டி

வாரணம் ஆயிரம் - பிரபல டிவியின் புதிய தொடர்!

நாகர்கோவில்-சென்னை சிறப்பு ரயில் காலதாமதமாக புறப்படும் -ரயில்வே அறிவிப்பு

SCROLL FOR NEXT