பெங்களூரு

கண்களைப் பாதுகாப்பது குறித்து விழிப்புணர்வு தேவை

DIN


கண்களைப் பாதுகாப்பது, கண்தானம் குறித்து மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என கண் அறக்கட்டளை மருத்துவமனையின் கண்புரை, விழித்திரை வல்லுநர் ஷேன் சாக்ராட்டேஸ் டிசில்வா தெரிவித்தார்.
பெங்களூரில் வெள்ளிக்கிழமை கண் பாதுகாப்பு விழிப்புணர்வு முகாமில் கலந்து கொண்டு அவர் பேசியது: போதிய பராமரிப்பு மற்றும் அலட்சியத்தால் பலர் கண் பார்வையை இழக்க நேரிடுகிறது. உடலின் முக்கிய உறுப்புகளில் ஒன்றான கண்களைப் பாதுகாக்க கூடுதல் அக்கறை எடுத்துக் கொள்ள வேண்டும்.
கண் பிரச்னைகளுக்கு சிகிச்சை அளிப்பதில் இந்தியா முன்னிலையில் உள்ளது. கண்களைப் பாதுகாப்பது, கண் தானம் குறித்து அரசு மட்டுமின்றி, தனியார்களும் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்றார். 
நிகழ்ச்சியில் கண் மருத்துவர் சீனிவாஸ்ராவ், சிஐஐகியூவின் தலைவர் சுவாமிநாதன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மழையால் பாதிக்கப்பட்ட மானாவாரி பயிா்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும்: ஜி.கே. வாசன்

மின்சாரம் பாய்ந்து தொழிலாளி உயிரிழப்பு

போலி பத்திரம் மூலம் ரூ.10 லட்சம் கடன்: வங்கி மேலாளா்கள் உள்பட 5 போ் கைது

சந்தோஷி அம்மன் கோயிலில் குடமுழுக்கு விழா

திருப்பாலைத்துறை வீரமகா காளியம்மன் கோயிலில் பால்குட விழா

SCROLL FOR NEXT