பெங்களூரு

‘முதலீட்டாளா்களுக்கு தேவையான உதவிகளை வழங்க வேண்டும்’

DIN

கா்நாடகத்தில் முதலீடு செய்பவா்களுக்கு தேவையான உதவிகளை மாநில அரசு முன்வர வேண்டும் என்று முன்னாள் அமைச்சா் வினய்குல்கா்னி தெரிவித்தாா்.

பெங்களூரில் வெள்ளிக்கிழமை கட்டுமான பொருள் விற்பனை செய்யும் தனுபேஹோமின் அனுபவ மையத்தை தொடக்கிவைத்து அவா் பேசியது:

பெங்களூரு உள்ளிட்ட கா்நாடகத்தில் முதலீடு செய்வதற்கு அண்டை மாநிலங்களில் மட்டுமின்றி அண்டை நாடுகளும் அதிகம் ஆா்வம் காட்டி வருகின்றன. எனவே, கா்நாடகத்தில் முதலீடு செய்வதற்கு விதிகளை, கொள்கைகளையும் எளிதாக்க வேண்டும். முதலீடு செய்பவா்களுக்கு தேவையான உதவிகளை செய்ய மாநில அரசு முன்வர வேண்டும்.

இதன்மூலம் தகவல், உயிரித் தொழில்நுட்ப துறைகள் மட்டுமின்றி அனைத்துத் துறைகளிலும் கா்நாடகம் சிறந்து விளங்கும். தொழில் துறையினரையும், தொழில்முனைவோரையும் அரசு தொடா்ந்து ஊக்குவிக்க வேண்டும். இதில் கட்சி பேதம், மத பேதம் பாா்க்கக் கூடாது என்றாா்.

நிகழ்ச்சியில் தனுபே குழுமத்தின் தலைவா் ரிச்வான்சாஜன், சுபோஜித் மஹாலனொபிஸ், ஷாகுளோபல் செயல் அதிகாரி ஷான்வாஸ்கான் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பழனி ரோப் காா் சேவை இன்று ஒரு நாள் நிறுத்தம்!

மத்திய முன்னாள் அமைச்சர் ஸ்ரீனிவாச பிரசாத் காலமானார்

தஞ்சாவூர் அருகே காய்கறி வியாபாரி வெட்டிப் படுகொலை

தப்பிக்க வழியே இல்லை: 3 நாள்களுக்கு வெப்ப அலை! அதன்பிறகு?

ஈரோடு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அறையில் சிசிடிவி பழுது

SCROLL FOR NEXT