பெங்களூரில் அண்மையில் பள்ளி மாணவர்களுக்கான ரோபோ தொழில்நுட்பப் போட்டி நடைபெற்றது.
பெங்களூரில் ஞாயிற்றுக்கிழமை இந்திய ரோபோ கப் ஜூனியர் அறக்கட்டளை சார்பில் சர்வதேச அளவிலான பள்ளி மாணவர்களுக்கான ரோபோ தொழில்நுட்பப் போட்டி நடைபெற்றது. இதில் கர்நாடகம் சிக்பள்ளாபூரைச் சேர்ந்த டிஜிஎஸ் வேர்ல்டு பள்ளி, பெங்களூரு சர்ஜாபுராவைச் சேர்ந்த கிரின்வுட், நொய்டாவைச் சேர்ந்த சிவநாட் உள்ளிட்ட பள்ளிகள் முதல் பரிசைப் பெற்றன.
மேலும், போட்டியில் சிறந்து விளங்கிய 11 பள்ளிகள் ஜூலை மாதத்தில் ஆஸ்திரேலியாவில் நடைபெறும் ரோபோ தொழில்நுட்பப் போட்டியில் கலந்து கொள்ளவும் தேர்வு
செய்யப்பட்டன.
இது குறித்து இந்திய ரோபோ கப் ஜூனியர் அறக்கட்டளையின் தலைவர் டேவிட் பிரகாஷ் செய்தியாளர்களிடம் கூறியது: எதிர்காலத்தில் சர்வதேச அளவில் ரோபோக்கள் ஆதிக்கம் அதிக அளவில் இருக்கும். எனவே, பள்ளி மாணவர்களிடத்தில் இது குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கில் ரோபோ தொழில்நுட்பப் போட்டிக்கு ஏற்பாடு செய்தோம். இதில் தேசிய அளவிலான பல்வேறு பள்ளிகளைச் சேர்ந்த மாணவர்கள் கலந்து கொண்டனர். போட்டியில் கலந்து கொண்ட மாணவர்களின் ரோபோ தொழில்நுட்பம் சிறந்ததாக இருந்தது மகிழ்ச்சியளிக்கிறது என்றார் அவர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.