பெங்களூரு

மெட்ரோ ரயில் கட்டுமானப் பணி: போக்குவரத்தில் மாற்றம்

மெட்ரோ ரயில் கட்டுமானப் பணி காரணமாக பெங்களூரில் ஒருசில இடங்களில் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளன.

DIN

மெட்ரோ ரயில் கட்டுமானப் பணி காரணமாக பெங்களூரில் ஒருசில இடங்களில் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளன.
இதுகுறித்து பெங்களூரு மெட்ரோ ரயில்கழகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: பெங்களூரு மெட்ரோ ரயில்கழகம், பெங்களூரில் மெட்ரோ ரயில் சேவைகளை வழங்கிவருகிறது. இதன் அடுத்தக்கட்டமாக, 6-ஆவது பாதையில் உயர்மேம்பாலம் கட்டும்பணி நடந்துவருகிறது. இதற்காக பன்னர்கட்டா சாலையில் உள்ள ஜெயதேவா சந்திப்பில் தூண்களை அமைக்கும் பணி தொடங்கியுள்ளது. 
இதன்காரணமாக, ஜெயதேவா சந்திப்பில் இருந்து ஜேடிமர சந்திப்புவரையிலான துணைசாலை ஜன.3-ஆம் தேதி முதல் மூடப்படுகிறது. எனவே, மத்திய பட்டுவாரிய சந்திப்பில் இருந்து ஜேடிமரா சந்திப்பு வரையிலான தடத்தின்  போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
மத்திய பட்டுவாரிய சந்திப்பில் இருந்து வாகனங்கள் 16-ஆவது பிரதானசாலையில் இடதுபக்கம் திரும்பி, 7-ஆவது குறுக்குசாலை வழியாக கோபாலன்மால் அருகில் பன்னர்கட்டா சாலையைஅடையலாம். ஜெயதேவா சந்திப்பில் போக்குவரத்து மாற்றம் எதுவும் செய்யப்படவில்லை. பொதுமக்களின் வசதிக்காக போக்குவரத்து மாற்றங்களை குறிக்கும் அடையாளப் பதாகைகள் வைக்கப்பட்டுள்ளதாக அதில் கூறப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

13 ஆண்டுகளுக்குப் பிறகு ஆக்‌ஷன் அல்லாத கதையில் டாம் குரூஸ்..! ஆஸ்கர் வென்ற இயக்குநருடன்!

125 புதிய மின்சாரப் பேருந்துகள் சேவையை தொடக்கிவைத்தார் உதயநிதி!

வார பலன்கள்: 12 ராசிகளுக்கும்!

மத்திய பட்ஜெட் - 2026 ஞாயிற்றுக்கிழமை தாக்கல் செய்யப்படுமா?

100 நாள் வேலைத் திட்டம் மாற்றம்: திமுக கூட்டணி மாபெரும் ஆர்ப்பாட்டம் அறிவிப்பு!

SCROLL FOR NEXT