பெங்களூரு

சிறப்பு இசை, நாட்டியம், தாளவாத்திய தேர்வு: நுழைவுச் சீட்டு தரவிறக்கம் செய்து கொள்ளலாம்

சிறப்பு இசை, நாட்டியம் மற்றும் தாளவாத்தியப் பாடங்களுக்கான தேர்வுக்கு விண்ணப்பித்திருக்கும் மாணவர்கள்

DIN

சிறப்பு இசை, நாட்டியம் மற்றும் தாளவாத்தியப் பாடங்களுக்கான தேர்வுக்கு விண்ணப்பித்திருக்கும் மாணவர்கள் நுழைவுச் சீட்டை தரவிறக்கம் செய்துகொள்ளலாம் என்று கர்நாடக மேல்நிலைக் கல்வி தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.
இதுகுறித்து கர்நாடக மேல்நிலைக் கல்வி தேர்வு வாரியம் (கேஎஸ்இஇபி) வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: 2019-ஆம் ஆண்டுக்கான சிறப்பு இசை, நாட்டியம், தாளவாத்தியப் பாடங்களுக்கான தேர்வை நடத்த கர்நாடக மேல்நிலைக் கல்வி தேர்வு வாரியம் திட்டமிட்டுள்ளது. இப்பாடங்களுக்கான முதுநிலை, முன்சிறப்புநிலை, சிறப்புநிலை இறுதி எழுத்துத் தேர்வு மே 25, 26 ஆகிய தேதிகளில் எழுத்துத் தேர்வும், மே 27-ஆம் தேதி செய்முறை தேர்வும் நடைபெறுகிறது.
இத்தேர்வில் கலந்துகொள்ள விண்ணப்பங்களை செலுத்தியவர்கள் w‌w‌w.‌k‌s‌e‌e​b.‌k​a‌r.‌n‌i​c.‌i‌n  என்ற இணையதளத்தில் இருந்து நுழைவுச் சீட்டுகளை தரவிறக்கம் செய்துகொண்டு, தேர்வு எழுதலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இரண்டு பைக்குகள் மோதி விபத்து: 2 போ் உயிரிழப்பு

இஸ்ரேலியா்கள் கொடைக்கானல் வருகை: துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு

தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் இருவா் கைது

ஆரிகவுடா் விவசாயிகள் சங்க பொதுக்குழுக் கூட்டம்

திருப்பரங்குன்றம் தீப விவகாரம்! ஒருவர் தீக்குளித்து தற்கொலை!

SCROLL FOR NEXT