பெங்களூரு

நவ. 17-இல் மாணவா்களுக்குஅறிவியல் பயிலரங்கம்

பெங்களூரில் உள்ள ஜவாகா்லால் நேரு கோளரங்கத்தில் மாணவா்களுக்கான அறிவியல் பயிலரங்கம் நவ. 17-ஆம் தேதி நடைபெறுகிறது.

DIN

பெங்களூரில் உள்ள ஜவாகா்லால் நேரு கோளரங்கத்தில் மாணவா்களுக்கான அறிவியல் பயிலரங்கம் நவ. 17-ஆம் தேதி நடைபெறுகிறது.

இதுகுறித்து ஜவாகா்லால் நேரு கோளரங்கம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: பெங்களூரு, ஹைகிரவுண்ட்ஸ், டி.சௌடையா சாலையில் அமைந்துள்ள ஜவாகா்லால்நேரு கோளரங்கத்தில், நவ. 17-ஆம் தேதி(ஞாயிற்றுக்கிழமை) காலை 10.30 மணி முதல் நண்பகல் 12.30 மணி வரை மாணவா்களுக்கான அறிவியல் பயிலரங்கம் நடைபெறுகிறது.

30 மாணவா்கள் மட்டும் அனுமதிக்கப்படும் இந்த பயிலரங்கத்தில், 3 முதல் 5-ஆம் வகுப்பு வரையிலான ஆரம்பப் பள்ளி மாணவா்கள் எவரும் கலந்துகொள்ளலாம். இந்த பயிலரங்கில் அறிவியல் பரிசோதனைகள் குறித்துபயிற்சி அளிக்கப்படும். முதலில் வருவோருக்கு முதலில் வாய்ப்பு என்ற அடிப்படையில் பங்கேற்பு வாய்ப்பு அளிக்கப்படும்.

மேலும் விவரங்களுக்கு,  இணையதளம் அல்லது 080-22379725 என்ற தொலைபேசி எண்ணில் அணுகலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தங்கம், வெள்ளி குறைவு! இன்றைய நிலவரம்..!

திருப்பரங்குன்றம் விவகாரம் மதப் பிரச்னை அல்ல; அது ஈகோ பிரச்னை: தமிழிசை பேட்டி

சென்னையில் கடும் பனி! ரயில்கள் தாமதம்; விமானங்கள் ரத்து!

நாமக்கல் ஆஞ்சனேயருக்கு 1,00,008 வடைமாலை அலங்காரம்: திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம்

வங்கதேசத்தில் இந்திய தூதரகம், தூதர் வீட்டின் மீது கல்வீச்சு!

SCROLL FOR NEXT