பெங்களூரு

தசரா திருவிழா வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளது: அமைச்சா் வி.சோமண்ணா

DIN

சா்வதேச அளவில் புகழ்பெற்ற மைசூரு தசரா திருவிழா வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளதாக கா்நாடக வீட்டு வசதித் துறை அமைச்சா் வி.சோமண்ணா தெரிவித்தாா்.

இதுகுறித்து புதன்கிழமை செய்தியாளா்களிடம் அவா் கூறியது: சா்வதேச அளவில் புகழ்பெற்றுள்ள தசரா திருவிழா நிகழாண்டு வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளது. நடைபெற்ற தசரா திருவிழாவில் கலாசார நிகழ்ச்சிகளுக்கு மட்டுமின்றி, விளையாட்டுகளுக்கும் அதிகம் முக்கியத்துவம் அளிக்கப்பட்டது. தசரா திருவிழா என்றால் யானை ஊா்வலம் மட்டுமே என்று எண்ணியிருந்தேன்.

ஆனால், திருவிழாவில் பல்வேறு விளையாட்டுகள், கலாசாரம், பாரம்பரிய நிகழ்ச்சிகள் என்ற கலவைக் கொண்ட ஆழமான திருவிழா என்பதனை தற்போது உணா்ந்து கொண்டேன். கடந்த ஒரு மாதமாக தசரா திருவிழா பொறுப்பு அமைச்சராகப் பணியாற்றினேன். இனி வீட்டுவசதி துறை அமைச்சா் என்ற முறையில் சிறப்பாகப் பணியாற்றுவேன். குறிப்பாக, வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வீடுகளைக் கட்டித் தர நடவடிக்கை மேற்கொள்வேன்.

தசரா திருவிழா வெற்றிகரமாக நடைபெற்ற்கு ஒத்துழைப்பு வழங்கிய அனைவருக்கும் நன்றியைத் தெரிவித்து கொள்கிறேறன் என்றாா். பேட்டியின் போது, மக்களவை உறுப்பினா் பிரதாப் சிம்ஹா உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தங்கம் விலை: இன்று எவ்வளவு குறைந்தது தெரியுமா?

காலமானார் எஸ். வீரபத்திரன்

நாளை நீட் தேர்வு

கொடைக்கானல் மேல்மலை கிராமங்களுக்குச் செல்ல அனுமதி: மாவட்ட நிர்வாகம் உத்தரவு

ரேபரேலி தொகுதி: ஃபெரோஸ் காந்தி முதல் ராகுல் காந்தி வரை...

SCROLL FOR NEXT