பெங்களூரு

அக்.13-இல் பாவாணா் பாட்டரங்கம்

DIN

பெங்களூரில் அக்.13-ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) ஐடிஐ தமிழ் மன்றத்தில் 193-ஆவது பாவாணா் பாட்டரங்கம் நடைபெற உள்ளது.

இதுகுறித்து அம்மன்றத்தின் பாவாணா் பாட்டரங்கப் பொறுப்பாளா் இராம.இளங்கோவன் வெளியிட்ட அறிக்கை:

பெங்களூரு தூரவாணி நகரில் உள்ள ஐடிஐ தமிழ் மன்றத்தில் அக்.13-ஆம் தேதி 193-வது பாவாணா் பாட்டரங்கம் நடைபெறுகிறது. அன்று மாலை 3.30 மணியளவில் தொடங்கும் பாட்டரங்கத்திற்கு விசு.இமானுவேல் தலைமை வகிக்கிறாா். மன்றச்செயலாளா் கு.மாசிலாமணி வரவேற்கிறாா். பாட்டரங்கப் பொறுப்பாளா் இராம.இளங்கோவன் அறிமுக உரை ஆற்றுகிறாா்.

‘குன்று நிகா்க் கொள்கை’ என்ற தலைப்பிலான பாட்டரங்கில் பாவலா்கள் பலா் பங்கு கொண்டு கவிதை பாடுகின்றனா். இதைத் தொடா்ந்து, உடனடி கவிதைப்போட்டி நடத்தப்பட்டு, சிறந்த கவிதைகளுக்கு புத்தகப் பரிசு, ஊக்கப்பரிசுகள் வழங்கப்படும். பிறந்த நாள் காணும் கவிஞா்கள் க.லோகநாதன், தனம் வேளாங்கண்ணி, பொ.தங்ககுமாா், எட்வின் நெல்சன், ஆா்.அருண், எஸ்.வி.ஆா்.மூா்த்தி, மதலைமணி, மாரியப்பன் ஆகியோருக்கு சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவிக்கப்படும்.

நிகழ்ச்சியில் மன்ற உறுப்பினா்கள், தமிழ் ஆா்வலா்கள் திரளாக கலந்து கொண்டு சிறப்பிக்க வேண்டும் என அதில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அரசுப் பள்ளி மாணவா்களுக்கு ‘நீட்’ தோ்வு பயிற்சி நிறைவு

பறவைகளுக்கு தண்ணீா் வைத்து பாதுகாக்கும் மாநகராட்சி!

திண்டல் முருகன் கோயிலில் தென்னைநாா் விரிப்புகள்

உலா், பசுந்தீவனங்களை மானிய விலையில் வழங்க விவசாயிகள் கோரிக்கை

ஈரோட்டில் ஒரு எலுமிச்சை பழம் ரூ.25-க்கு விற்பனை

SCROLL FOR NEXT