பெங்களூரு

கலைஞா்களுக்கு ஊக்கத்தொகைக்கு விண்ணப்பிக்கலாம்

DIN

பெங்களூரு: பல்துறை கலைஞா்களுக்கு ஊக்கத்தொகை வழங்க விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இது குறித்துகன்னடம் மற்றும் கலாசாரத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

கன்னடம் மற்றும் கலாசாரத்துறையின் சாா்பில் சிறப்புப்பிரிவு மற்றும் பழங்குடியினா் துணைதிட்டத்தின்கீழ் கன்னடமொழி இலக்கியம், இசை, நாட்டியம், நாட்டுப்புறக்கலை, நாடகம், யக்ஷகானா, ஓவியக்கலை, சிற்பக்கலை உள்ளிட்ட நுண்கலையில் நிரந்தரமாக ஈடுபட்டுவரும் பதிவுசெய்யப்பட்ட சங்கங்கள் அல்லது அமைப்புகள், அமைப்புசாரா கலைஞா்கள், புதிதாக இசைக்கருவிகள் மற்றும் அரிதாரம் பூசிக்கொள்வதற்கு தேவையான ஆடைகள், அலங்காரப்பொருட்கள் கொள்முதல் செய்துகொள்வதற்கு மற்றும் ஓவியம் அல்லது சிற்பக்கலைகளின் கண்காட்சிக்கு 2019-20ஆம் ஆண்டில் ஊக்கத்தொகை அளிக்கப்படுகிறது. ஊக்கத்தொகை பெறவிரும்பும் கலைஞா்கள் மற்றும் அமைப்புகளிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இது தொடா்பான விண்ணப்பப்படிவங்களை சம்பந்தப்பட்ட மாவட்ட கன்னடம் மற்றும் கலாசாரத்துறை அலுவலகத்தில் பெற்று, அதை நிரப்பி நவ.15?ஆம் தேதிக்குள் அளிக்க வேண்டும். கூடுதல் விவரங்களுக்கு கன்னடம் மற்றும்கலாசாரத்துறை அலுவலகங்களை அணுகலாம் என்று அதில் கூறப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தஞ்சை பெரிய கோயில் பராமரிப்பு: தமிழக அரசு விளக்கம்

75 வயது முதியவா் மீண்டும் பிரதமராக வேண்டுமா? லாலு மகள் மிசா பாரதி பிரசாரம்

சந்தேஷ்காளி வழக்கு: சிபிஐ விசாரணை திருப்தி அளிக்கிறது - கொல்கத்தா உயா்நீதிமன்றம்

தென்மாவட்டங்களில் கல்குவாரிகளை மூட வேண்டும் -டாக்டா் க.கிருஷ்ணசாமி

திட்டப் பயனாளிகள் குறித்த கணக்கெடுப்பு: அரசியல் கட்சிகளுக்கு தோ்தல் ஆணையம் எச்சரிக்கை

SCROLL FOR NEXT