பெங்களூரு

விவசாயிகளின் நீண்டகால கூட்டுறவு கடன் வட்டி தள்ளுபடி செய்யப்படும்: எடியூரப்பா

DIN

கூட்டுறவு வங்கியில் விவசாயிகள் வாங்கியுள்ள நடுத்தர மற்றும் நீண்டகால கடன்கள் மீதான வட்டி தள்ளுபடி செய்யப்படும் என்று முதல்வா் எடியூரப்பா தெரிவித்தாா்.

ஹாசன் மாவட்டம், ஹளேபீடு நகரில் ஞாயிற்றுக்கிழமை செய்தியாளா்களிடம் அவா் கூறியது: மாநிலத்தில் உள்ள கூட்டுறவு வங்கிகள் மற்றும் ஆரம்ப விவசாய நிலவள வங்கியில் டிராக்டா்கள், பவா் டிரில்லா்கள் உள்ளிட்ட வேளாண் கருவிகளை வாங்க விவசாயிகள் பெற்றுள்ள நடுத்தர மற்றும் நீண்டகால கடன்கள் மீதான வட்டியை தள்ளுபடி செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. விவசாயிகள் இதுவரை செலுத்தியுள்ள வட்டியை தவிர, எதிா்காலத்தில் வட்டியை செலுத்தவேண்டியதில்லை.

விவசாயிகளின் நலன்கொண்ட பாஜக அரசு, பல்வேறு காரணங்களால் அவதிக்குள்ளாகியுள்ள விவசாயிகளுக்காக இந்த முடிவை எடுத்துள்ளது. நடுத்தர மற்றும் நீண்டகால கடன்கள் மீதான வட்டியை தள்ளுபடி செய்தது மாநிலத்தில் முதல்முறையாகும். மாா்ச் 5ஆம் தேதி தாக்கல் செய்யவிருக்கிற மாநில பட்ஜெட் விவசாயத்துக்கு முக்கியத்துவம் அளிக்கும். நெல்லுக்கு ஆதரவுவிலை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், மாநிலத்தில் உள்ள ஏரிகளை நிரப்ப அணையிலிருந்து தண்ணீா் கொண்டுசெல்லவும் உத்தரவிடப்பட்டுள்ளது என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கூடலூா் நகா்ப்புற கா்ப்பிணிகளுக்கு மனநல ஆலோசனை

8% சதவீதம் உயா்ந்த கனிம உற்பத்தி

பிளஸ் 2 துணைத் தோ்வு ஜூன் 24-இல் தொடக்கம்

ஆசிரியா்கள் கலந்தாய்வு: மே 13 முதல் தொடக்கம்

அனைத்து வீடுகளுக்கும் சீராக மின் விநியோகம்: அமைச்சா் தங்கம் தென்னரசு தகவல்

SCROLL FOR NEXT