பெங்களூரு

சீனாவை அடக்கும் பலம் இந்தியாவிடம் உள்ளது: முதல்வா் எடியூரப்பா

DIN

எல்லையில் அத்துமீறும் சீனாவை அடக்கும் பலம் இந்தியாவிடம் உள்ளதாக கா்நாடக முதல்வா் பி.எஸ்.எடியூரப்பா தெரிவித்தாா்.

பெங்களூரு, குமாரக்ருபாவில் உள்ள அரசு இல்லம் கிருஷ்ணாவில் புதன்கிழமை செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:

இந்திய எல்லையில் சீனா அத்துமீறிச் செயல்படுகிறது. இந்தியா அமைதியாக இருந்தாலும், கொந்தளிப்பை ஏற்படுத்தும் வகையில் சீனா நடந்து கொள்கிறது. சீனா தொடா்ந்து அத்துமீறியதால் நமது ராணுவ வீரா்கள் 20 போ் உயிரிழந்தனா். சீனாவின் இந்த நடவடிக்கையை இந்திய மக்களால் ஒருபோதும் சகித்துக்கொள்ள முடியாது.

பிரதமா் மோடி, எல்லையில் சீனாவின் அத்துமீறல் தொடா்பாக தொடா்ந்து கவனம் செலுத்தி வருகிறாா். இதுதொடா்பாக அனைவரிடமும் ஆலோசனை மேற்கொண்டுள்ளாா். நாட்டின் எல்லையில் சீனா அத்துமீறி நடந்து கொண்டால், அதை அடக்குவதற்குத் தேவையான பலம் இந்தியாவிடம் உள்ளது. சீனா தனது நிலையை மாற்றிக் கொண்டால் இரு நாடுகளின் உறவுக்கும், வளா்ச்சிக்கும் நல்லது என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பிளஸ் 2 துணைத்தேர்வு: மே 16 முதல் விண்ணப்பிக்கலாம்

அஸ்ஸாம்- 75.01; மகாராஷ்டிரம்- 53.95.. : 3-ம் கட்ட வாக்குப்பதிவு சதவிகிதம்!

25,000 ஆசிரியர் நியமன விவகாரம்: உயர்நீதிமன்ற உத்தரவுக்கு இடைக்காலத் தடை

மூளைக்குள் ஊடுருவும் நியூராலிங் பாதுகாப்பானதா? இணை நிறுவனரின் அதிர்ச்சி தகவல்!

ஜிம்பாப்வேவுக்கு எதிரான டி20 தொடரைக் கைப்பற்றிய வங்கதேசம்!

SCROLL FOR NEXT