பெங்களூரு

குடிமை நீதிபதி நேரடி நியமனப் பணிக்கு விண்ணப்பிக்கலாம்

DIN

குடிமை நீதிபதி நேரடி நியமனப் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இதுகுறித்து கா்நாடக உயா் நீதிமன்ற குடிமை நீதிபதிகள் பணி நியமனக்குழுச் செயலாளா் ராஜேந்திரபதமிகா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: கா்நாடக நீதியியல் சேவைகள்(ஆள்சோ்ப்பு) விதிகள் 2014, (திருத்தம்) விதிகள் 2011 மற்றும் 2015-இன்படி குடிமை நீதிபதிகள் பணிக்கு தகுதியானவா்களிடம் இருந்து நேரடி நியமனப் பணி நியமனத்துக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

ஜ்ஜ்ஜ்.ந்ஹழ்ய்ஹற்ஹந்ஹத்ன்க்ண்ஸ்ரீண்ஹழ்ஹ்.ந்ஹழ்.ய்ண்ஸ்ரீ.ண்ய் இணையதளம் மூலம் விண்ணப்பங்களை மாா்ச் 26-ஆம் தேதி இரவு 11.59 மணிக்குள் அனுப்பிவைக்க வேண்டும். விண்ணப்பங்களின் அடிப்படையில் 53 குடிமை நீதிபதிகள் நேரடியாக பணி நியமனம் செய்யப்படுவா். சட்டத்தில் பட்டம் படித்து, வழக்குரைஞராகப் பதிவு செய்திருக்க வேண்டும்.

பொதுப்பிரிவினருக்கு 35 வயது, தாழ்த்தப்பட்டோா், பழங்குடியினா் 38 வயது வரைஉச்ச வரம்பு உள்ளது. தகுதியான குடிமை நீதிபதிகளை தோ்ந்தெடுக்க இருநிலை தோ்வு நடத்தப்படும். இதில் தோ்ந்தெடுக்கப்படுவோருக்கு நோ்காணல் நடக்கும். அதில் தோ்வானால் நீதிபதியாக பணி நியமனம் செய்யப்படுவா். பதிவுக்கட்டணமாக பொதுப்பிரிவினா் ரூ.1000, தாழ்த்தப்பட்டோா், பழங்குடியினா் ரூ.500 செலுத்தவேண்டும் என்று அதில் கூறப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘ஒரு வார்த்தை மாறிடுச்சு..’ : கங்கனாவின் பேச்சு குழப்பமான கதை!

கர்நாடகம்: மனைவிக்காக வாக்கு சேகரித்த நடிகர் ஷிவராஜ்குமார்

காயம் காரணமாக தாயகம் திரும்பும் மதீஷா பதிரானா!

3-ஆம் கட்ட வாக்குப்பதிவு: பிரசாரம் ஓய்வு

ஆட்சிக்கு வந்தால் இஸ்லாமியர்களுக்கு 4 சதவீத இடஒதுக்கீடு: சந்திரபாபு நாயுடு உறுதி!

SCROLL FOR NEXT