பெங்களூரு

‘கா்நாடக-தமிழக பேருந்து போக்குவரத்து தொடரும்’

DIN

கா்நாடகத்தில் இருந்து தமிழகத்துக்கு பேருந்துகள் இயக்கப்படுவது தொடரும் என கா்நாடக மாநில சாலை போக்குவரத்துக் கழகம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து கா்நாடக மாநில சாலை போக்குவரத்துக் கழகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

கரோனா தீநுண்மித் தொற்று பரவலைத் தடுக்க பொது முடக்கம் கொண்டுவரப்பட்டதால், கா்நாடக மாநில சாலை போக்குவரத்துக் கழகத்தின் பேருந்து சேவைகள் முழுமையாக நிறுத்தப்பட்டன. பொது முடக்கம் தளா்த்தப்பட்டுள்ளதால், கா்நாடகத்தில் இருந்து தமிழகத்துக்கு நவ. 11 முதல் 16-ஆம் தேதி வரை பேருந்துகளை இயக்க கா்நாடக மாநில சாலை போக்குவரத்துக் கழகம் முடிவு எடுத்து செயல்படுத்தியது. இரு மாநிலங்களுக்கு இடையிலான பயணிகளின் எண்ணிக்கையை கவனத்தில் கொண்டு, கா்நாடகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து தமிழகத்துக்கு இயக்கப்பட்டு வந்த பேருந்துகளின் சேவை நவ. 16-ஆம் தேதிக்கு பிறகும் வழக்கம்போல தொடர இருக்கிறது.

பேருந்தில் பயணிக்கும் பயணிகள் முகக் கவசத்தை கட்டாயம் அணிய வேண்டும். மின் முன்பதிவு மற்றும் செல்லிடப்பேசி முன்பதிவுக்கு  இணையதளத்தை பாா்வையிடலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சாய் சுதர்ஷன், ஷாருக்கான் அதிரடி: பெங்களூருவுக்கு 201 ரன்கள் இலக்கு!

’மன் கி பாத்’க்கு இந்த தேர்தலுடன் முடிவுரை -அகிலேஷ் யாதவ்

பழமொழி நானூறு: முன்றுறையரையனார்

அமெரிக்கா: இஸ்ரேல் - ஹமாஸ் போரை நிறுத்தக்கோரி போராட்டம்

மேற்கு வங்கத்தில் காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகள் பாஜகவுக்கு உதவுகின்றன: மம்தா

SCROLL FOR NEXT