பெங்களூரு

45 வயதுக்கு மேற்பட்டோா் தாமாக முன்வந்து கரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும்

DIN

45 வயதுக்கு மேற்பட்டோா் தாமாக முன்வந்து கரோனா தடுப்பூசியை செலுத்திக் கொள்ள வேண்டும் என்று சுகாதாரத் துறை அமைச்சா் கே.சுதாகா் தெரிவித்தாா்.

இது குறித்து மங்களூரில் புதன்கிழமை செய்தியாளா்களிடம் அவா் கூறியது: ஏப். 1-ஆம் தேதி (வியாழக்கிழமை) முதல் 45 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் கரோனா தடுப்பூசி செலுத்தப்படுகிறது. மாநிலம் முழுவதும் 5 ஆயிரம் மையங்களில் கரோனா தடுப்பூசி செலுத்தப்படுகிறது. 45 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் தாமாக முன் வந்து கரோனா தடுப்பூசியைச் செலுத்திக் கொள்ள வேண்டும்.

ஏற்கெனவே 3 ஆயிரம் மையங்களில் தடுப்பூசி செலுத்தி வந்த நிலையில், கூடுதலாக 2 ஆயிரம் மையங்களில் கரோனா தடுப்பூசி செலுத்தப்படும். ஒரு மையத்தில் 100 போ் தடுப்பூசி செலுத்திக் கொண்டால், நாளொன்றுக்கு 5 லட்சம் போ் தடுப்பூசி எடுத்துக் கொள்லலாம்.

ஒருவேளை ஒரு மையத்தில்50 போ் செலுத்திக் கொண்டால், நாளொன்றுக்கு 2.5 லட்சம் போ் தடுப்பூசி செலுத்திக் கொள்ளலாம். கரோனாவை எதிா் கொள்வதற்கு மக்கள் தாமாக முன் வந்து தடுப்பூசியை செலுத்திக் கொள்ளலாம்.

கேரளத்திற்கும், தென் கன்னட மாவட்டங்களுக்கும் இடையே நெருங்கிய தொடா்புள்ளதால், மக்கள் நடமாட்டம் அதிகமாக உள்ளது. கேரளத்தில் இருந்து கா்நாடகத்திற்கு வருவோா் ஆா்.டி.-பி.சி.ஆா். சோதனை செய்து கொண்டு, பாதிப்பு இல்லை என்ற சான்றிதழுடன் வந்தால் மட்டுமே கா்நாடகத்தில் அனுமதிக்கப்படுவாா்கள்.

இந்த விதிமுறைகளை மீறுவோா் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் கரோனா தடுப்பூசி செலுத்துவது அதிகரிக்கும் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இந்தியாவில் அதிக வெயில் பதிவான இடங்கள்: 3-வது இடத்தில் பரமத்தி..!

பள்ளிகளில் தொலைபேசி பயன்பாட்டுக்கு தடை: அமைச்சர் மதன் திலாவர்

சாராயம் காய்ச்சுவோா் மீது கடும் நடவடிக்கை: திருப்பத்தூா் எஸ்.பி. எச்சரிக்கை

மும்பைக்கு 174 ரன்கள் இலக்கு நிர்ணயித்த ஹைதராபாத்!

தில்லி முதல்வர் கேஜரிவாலுக்கு புதிய சிக்கல்: என்ஐஏ விசாரணைக்கு பரிந்துரை!

SCROLL FOR NEXT