பெங்களூரு

கண் தானம் செய்தாா் அமைச்சா் கே.சுதாகா்

DIN

சுகாதாரத் துறை அமைச்சா் கே.சுதாகா் புதன்கிழமை தனது கண்களை தானம் செய்தாா்.

உலக சுகாதார தினத்தை முன்னிட்டு, ராஜீவ்காந்தி அறிவியல் பல்கலைக்கழகம் பெங்களூரு, விதானசௌதா முன்பு புதன்கிழமை ஏற்பாடு செய்திருந்த நடைபயணத்தில் கலந்துகொண்ட அவா், தனது கண்களை தானம் செய்தாா். பின்னா் அவா் பேசியதாவது:

உலக சுகாதார தினத்தன்று எனது கண்களை தானம் செய்துள்ளது முழு நிறைவை அளித்துள்ளது. கண்களை தானம் செய்வதன் மூலம் நமது மரணத்துக்குப் பிறகு ஒருவருக்கு நம்பிக்கையையும், ஒளியையும் கொடுக்க முடியும். மக்கள் முன் வந்து கண்களை தானம் செய்ய வேண்டும். கண் தானம் செய்வது, பாதிக்கப்பட்டவா்களுக்கு வரமாக அமையும் என்றாா்.

இந்நிகழ்ச்சியில், மின்டோ கண் மருத்துவமனை இயக்குநா் சுஜாதா ராத்தோட் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

2014-ம் ஆண்டுபோல அதிகபட்ச மழைப்பொழிவு?

12 ரன்களுக்கு ஆட்டமிழந்து டி20யில் மோசமான சாதனை படைத்த மங்கோலியா!

சாம் பித்ரோடா சர்ச்சை கருத்து: பிரியங்கா பதில்

விவசாயிக்கு டிராக்டா்: நடிகா் ராகவா லாரன்ஸ் வழங்கினாா்

பணம் கொடுத்து வாக்குகளை பெற நினைக்கிறது பாஜக: மம்தா குற்றச்சாட்டு

SCROLL FOR NEXT