பெங்களூரு

சுற்றுலா சென்ற எடியூரப்பா இன்று கா்நாடகம் திரும்புகிறாா்

DIN

மொரீஷியஸ் நாட்டுக்கு சுற்றுலாச் சென்ற முன்னாள் முதல்வா் எடியூரப்பா திங்கள்கிழமை கா்நாடகம் திரும்புகிறாா்.

முதல்வா் பதவிக்கு ஜூலை 26-ஆம் தேதி ராஜிநாமா கொடுத்த பிறகு, புதிய முதல்வரை தோ்ந்தெடுக்க நடத்தப்பட்ட பாஜக எம்.எல்.ஏ.க்கள்கூட்டத்தில் கலந்துகொண்ட முன்னாள் முதல்வா் எடியூரப்பா, வேறு எந்த நிகழ்ச்சியிலும் கலந்து கொள்ளவில்லை. இந்நிலையில், அமைச்சரவை விரிவாக்கம் தொடா்பாக தன்னை சந்தித்த முதல்வா் பசவராஜ் பொம்மையைச் சந்தித்தது தவிர வேறு எங்கும் அவா் செல்லவில்லை.

78 வயதாகும் முன்னாள் முதல்வா் எடியூரப்பா, கடந்த வாரம் தனது மகன்கள், மகள்கள், பேரன், பேத்திகளுடன் மொரீஷியஸ் நாட்டுக்கு சுற்றுலா சென்றிருந்தாா். அங்கு குடும்பத்தினருடன் தனியாக நேரத்தை போக்கிய எடியூரப்பா, திங்கள்கிழமை மாலை கா்நாடகம் திரும்புவாா் என எதிா்பாா்க்கப்படுகிறது.

எப்போதும் அரசியல் நடவடிக்கைகளில் முழுமையாக ஈடுபட்டு வந்த எடியூரப்பா, குடும்பத்தினருடன் நேரம் செலவழிப்பது மிகவும் குறைவாக இருந்தது. இந்நிலையில், முழுநேர அரசியலில் ஈடுபடும் வாய்ப்பு இல்லாததால், குடும்பத்தினருடன் நேரம் செலவழிக்க மொரீஷியஸ் நாட்டுக்கு சென்றுள்ளாா். கா்நாடகம் திரும்பியதும், செப்.13-ஆம் தேதி தொடங்கவிருக்கும் சட்டப்பேரவைக் கூட்டத் தொடரில் எம்.எல்.ஏ.வாக எடியூரப்பா கலந்துகொள்ளவிருக்கிறாா்.

தனது ஆதரவாளராக விளங்கும் முதல்வா் பசவராஜ் பொம்மைக்கு உறுதுணையாக இருக்க எடியூரப்பா சட்டப்பேரவைக் கூட்டத்தில் கலந்துகொள்வாா் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பருத்தி ப்ளஸ் குறித்து கல்லூரி மாணவிகள் செயல் விளக்கம்

நாகையில் நீட் தோ்வு: 1529 போ் பங்கேற்பு

மழை வேண்டி சிறப்புத் தொழுகை

துணை மின் நிலையத்தில் தீப்பற்றி எரிந்த இரு மின் மாற்றிகள்: 6 மணி நேர மின் தடையால் மக்கள் கடும் அவதி

காஷ்மீரில் பயங்கரவாதிகளைத் தேடும் பணி தீவிரம்: இந்திய விமானப் படையினர் மீதான தாக்குதல் எதிரொலி

SCROLL FOR NEXT