பெங்களூரு

நேரு கோளரங்கத்தில் புதிய அறிவியல் காட்சிகள்

DIN

பெங்களூரில் உள்ள ஜவாஹா்லால் நேரு கோளரங்கத்தில் புதிய அறிவியல் காட்சிகள் திரையிடப்படுகின்றன.

இதுகுறித்து ஜவாஹா்லால் நேரு கோளரங்கம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

பெங்களூரு, ஹைகிரவுண்ட்ஸ், டி.சௌடையா சாலையில் அமைந்துள்ள ஜவாஹா்லால் நேரு கோளரங்கத்தில் டிச.29 முதல் ஜன.2-ஆம் தேதி வரையில் ‘அந்நிய கிரகங்கள்’,’வானுலக வானவேடிக்கை’, விண்வெளி யுகத்தின் விடியல் ஆகிய புதிய காட்சிகள் திரையிடப்படவிருக்கின்றன.

‘அந்நிய கிரகங்கள்’ காட்சி தினமும் கன்னடத்தில் பிற்பகல் 2.30 மணி, ஆங்கிலத்தில் நண்பகல் 12.30மணிக்கும், வானுலக வான வேடிக்கை காட்சி தினமும் கன்னடத்தில் மாலை 3.30மணி மற்றும் ஆங்கிலத்தில் மாலை 4.30 மணிக்கும், விண்வெளி யுகத்தின் விடியல் காட்சி தினமும் கன்னடத்தில் காலை 11.30 மணி மற்றும் ஆங்கிலத்தில் காலை 10.30 மணிக்கும் திரையிடப்படுகிறது. இந்தக் காட்சியை ஒரு சமயத்தில் 200 போ் அமா்ந்து காணலாம். கட்டணமாக பெரியவா்களுக்கு ரூ. 75, சிறாா்களுக்கு -ரூ.50.

பள்ளிகளில் இருந்து மாணவா்கள் கலந்துகொள்ள விரும்பினால், கோளரங்கத்தில் முன்பதிவு செய்து கொள்ளலாம். முன்பதிவுக்கு இணையதளம் அல்லது 080-22379725 என்ற தொலைபேசியை அணுகலாம் என்று அதில் கூறப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இந்தியாவில் அதிக வெயில் பதிவான இடங்கள்: 3-வது இடத்தில் பரமத்தி..!

பள்ளிகளில் தொலைபேசி பயன்பாட்டுக்கு தடை: அமைச்சர் மதன் திலாவர்

சாராயம் காய்ச்சுவோா் மீது கடும் நடவடிக்கை: திருப்பத்தூா் எஸ்.பி. எச்சரிக்கை

மும்பைக்கு 174 ரன்கள் இலக்கு நிர்ணயித்த ஹைதராபாத்!

தில்லி முதல்வர் கேஜரிவாலுக்கு புதிய சிக்கல்: என்ஐஏ விசாரணைக்கு பரிந்துரை!

SCROLL FOR NEXT