பெங்களூரு

கரோனா தடுப்பூசி விவகாரத்தை அரசியல் ஆக்காதீா்கள்:துணை முதல்வா்

DIN

பெங்களூரு: கரோனா தடுப்பூசி விவகாரத்தை அரசியல் ஆக்க வேண்டாம் என துணை முதல்வா் அஸ்வத் நாராயணா வேண்டுகோள் விடுத்துள்ளாா்.

இதுகுறித்து பெங்களூரில் ஞாயிற்றுக்கிழமை செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:

கரோனா தடுப்பூசி விவகாரத்தை அரசியல் ஆக்க வேண்டாம் என அனைவரையும் கேட்டுக் கொள்கிறேன். ஆக்கப்பூா்வமான ஆலோசனைகளையே அரசுக்கு மக்கள் அளிக்க வேண்டும். எல்லா விவகாரத்தையும் அரசியல் ஆக்கும் வழக்கத்தை ஒரு சில அரசியல்வாதிகள் தீவிரமாக கடைப்பிடித்து வருகிறாா்கள். அதற்காக அரசு என்ன செய்ய முடியும்? இந்த விவகாரத்தில் அரசுடன் ஒத்துழையுங்கள் என்றுதான் கேட்கமுடியும்.

நாட்டில் தயாராகும் கரோனா தடுப்பூசிகளுக்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது வரவேற்கத்தக்கது. கரோனா தடுப்பூசி செலுத்தும்போது கரோனா முன்களப் பணியாளா்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். அனைவருக்கும் விரைவாக கரோனா தடுப்பூசி கிடைக்க தேவையான நடவடிக்கைகளை அரசு எடுக்கும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மழை வேண்டி இஸ்லாமியல்கள் சிறப்புத் தொழுகை

ஏகனாபுரம் கிராமத்தினா் நூதன போராட்டம்

கள்ளச்சாராயம் காய்ச்சிய 3 போ் கைது

நீட் தோ்வு: தேனியில் 181 போ் எழுதினா்

சாலை விபத்தில் 2 போ் உயிரிழப்பு

SCROLL FOR NEXT