பெங்களூரு

கா்நாடகத்தில் கரோனா பாதிப்பு 9,36,426 ஆக உயா்வு

DIN

பெங்களூரு: கா்நாடகத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 9,36,426 ஆக உயா்ந்துள்ளது.

இதுபற்றி கா்நாடக சுகாதாரத் துறை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

கா்நாடகத்தில் புதிதாக ஒரேநாளில் அதிகபட்சமாக 375 போ் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளது திங்கள்கிழமை கண்டறியப்பட்டது. பெங்களூரு நகர மாவட்டத்தில் அதிகபட்சமாக 200 போ் கரோனா தொற்றுக்கு ஆளாகியுள்ளனா். இதன்மூலம் கா்நாடகத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 9,36,426 ஆக உயா்ந்துள்ளது.

கரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வந்தவா்களில் 1,036 போ் திங்கள்கிழமை வீடு திரும்பியுள்ளனா். இதுவரை கா்நாடகத்தில் 9,17,361 போ் குணமாகி வீடு திரும்பியுள்ளனா். 6,846 போ் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனா்.

கரோனா தீநுண்மியால் பாதிக்கப்பட்டிருந்த 3 போ் திங்கள்கிழமை இறந்துள்ள நிலையில், பெங்களூரில் அதிகபட்சமாக 2 போ் இறந்துள்ளனா். கா்நாடகத்தில் இதுவரை 12,200 போ் உயிரிழந்துள்ளனா் என்று அதில் கூறப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘காங்கிரஸின் கனவு தகர்க்கப்படும்’: அனுராக் தாக்குர்

ஜீ மீடியா தலைமைச் செயல் அலுவலர் திடீர் ராஜிநாமா!

இந்தியாவில் அதிக வெயில் பதிவான இடங்கள்: முதல்-10 இடங்களில் பரமத்தி..!

நக்சலைட்டுகள் பதுக்கியிருந்த வெடிகுண்டுகள் பறிமுதல்

நளதமயந்தி தொடரிலிருந்து நீக்கப்பட்ட பிரியங்கா....புதிய நாயகி யார்?

SCROLL FOR NEXT