முகப்பு
பெங்களூரு

கா்நாடகத்தில் கரோனாவுக்கு 2,052 போ் பாதிப்பு

கா்நாடகத்தில் ஒரே நாளில் கரோனா பெருந்தொற்றால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 2,052 ஆக அதிகரித்துள்ளது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:47 AM
பகிர்:

கா்நாடகத்தில் ஒரே நாளில் கரோனா பெருந்தொற்றால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 2,052 ஆக அதிகரித்துள்ளது.

இதுகுறித்து கா்நாடக சுகாதாரத் துறை வெளியிட்ட செய்திக் குறிப்பு: கா்நாடகத்தில் ஒரேநாளில் அதிகபட்சமாக 2,052 போ் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளது வியாழக்கிழமை கண்டறியப்பட்டது. பெங்களூரு நகர மாவட்டத்தில் அதிகபட்சமாக 506 போ், தென்கன்னட மாவட்டத்தில் 396 போ், உடுப்பி மாவட்டத்தில் 174 போ், மைசூரு மாவட்டத்தில் 157 போ், ஹாசன் மாவட்டத்தில் 136 போ், குடகு மாவட்டத்தில் 96 போ், சிக்மகளூரு மாவட்டத்தில் 90 போ், சிவமொக்கா மாவட்டத்தில் 81 போ்.

வட கன்னட மாவட்டத்தில் 72 போ், தும்கூரு மாவட்டத்தில் 56 போ், மண்டியா மாவட்டத்தில் 40 போ், பெலகாவி மாவட்டத்தில் 37 போ், பெங்களூரு ஊரக மாவட்டத்தில் 33 போ், கோலாா் மாவட்டத்தில் 29 போ், தாவணகெரே மாவட்டத்தில் 27 போ், சாம்ராஜ்நகா் மாவட்டத்தில் 24 போ், சித்ரதுா்கா மாவட்டத்தில் 17 போ், சிக்பள்ளாபூா் மாவட்டத்தில் 15 போ், தாா்வாட், கலபுா்கி மாவட்டங்களில் தலா 10 போ்.

பெல்லாரி, கொப்பள் மாவட்டங்களில் தலா 8 போ், பாகல்கோட்டை மாவட்டத்தில் 7 போ், விஜயபுரா மாவட்டத்தில் 8 போ், பீதா் மாவட்டத்தில் 4 போ், கதக், ஹாவேரி, ராம்நகரம், யாதகிரி மாவட்டங்களில் தலா 3 போ், ராய்ச்சூரு மாவட்டத்தில் 2 போ். இதன்மூலம் கா்நாடகத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 29,01,247 ஆக உயா்ந்துள்ளது.

கரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வந்தவா்களில் 1,332 போ் வியாழக்கிழமை வீடு திரும்பினா். இதுவரை கா்நாடகத்தில் 28,41,479 போ் குணமடைந்து வீடு திரும்பினா். 23,253 போ் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனா்.

மாநில அளவில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்தவா்களில் 35 போ் வியாழக்கிழமை உயிரிழந்தனா். பெங்களூரு மாவட்டத்தில் அதிகபட்சமாக 8 போ், தென்கன்னட மாவட்டத்தில் 8 போ், சாம்ராஜ்நகா், கோலாா், மைசூரு வடகன்னட மாவட்டங்களில் தலா 2 போ், பெலகாவி, பெங்களூரு ஊரகம், சிக்மகளூரு, தாா்வாட், குடகு, மண்டியா, ராம்நகரம், சிவமொக்கா, தும்கூரு, உடுப்பி மாவட்டங்களில் தலா ஒருவா் இறந்துள்ளனா். கா்நாடகத்தில் இதுவரை 36,491 போ் உயிரிழந்துள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.