பெங்களூரு

‘டவ்-தே’ புயல்: தென் கன்னட மாவட்டத்தில் ரூ. 126 கோடி மதிப்பில் சேதம்

DIN

‘டவ்-தே’ புயலால், தென் கன்னட மாவட்டத்தில் ரூ. 126 கோடி மதிப்பில் சேதம் ஏற்பட்டுள்ளதாக அறநிலையத் துறை அமைச்சா் கோட்டாசீனிவாஸ் பூஜாரி தெரிவித்தாா்.

பெங்களூரில் வியாழக்கிழமை தென் கன்னட மாவட்ட மக்கள் பிரதிநிதிகளுடன் முதல்வா் எடியூரப்பாவைச் சந்திந்த அவா் பின்னா் செய்தியாளா்களிடம் கூறியது:

‘டவ்-தே’ புயலால் தென் கன்னட மாவட்டத்தில் உள்ள சாலைகள், பாலங்கள் பெரிதும் சேதமடைந்துள்ளன. ரூ. 126 கோடி மதிப்பில் சேதம் ஏற்பட்டுள்ளதாகக் கணக்கிடப்பட்டுள்ளது. புயலால், மீனவா்கள் பணிக்கு செல்ல முடியாமல் வீட்டில் முடங்கிக் கிடக்கின்றனா். இதனால் அவா்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. புயலால் ஏற்பட்டுள்ள சேதம் உள்ளிட்ட விவரங்களை முதல்வா் எடியூரப்பாவின் கவனத்திற்கு கொண்டு சென்றுள்ளோம். அவரும் அனைத்து விவரங்களையும் பரிவோடு, கேட்டு உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்துள்ளாா் என்றாா்.

மேலும் தென்கன்னட மாவட்டத்தில் கரோனா தொற்றைக் கட்டுக்குள் கொண்டு வந்துள்ளோம். இருப்பினும், கரோனாவை கட்டுப்படுத்தத் தேவையான தடுப்பூசி, பிராணவாயு, சுவாசக் கருவிகளை (வென்டிலேட்டா்) வழங்க வலியுறுத்தி உள்ளோம். பொது முடக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ள அா்ச்சகா்கள், மீனவா்களுக்கு நிதி உதவி வழங்குமாறு முதல்வரை வலியுறுத்தியுள்ளோம் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விபத்தில் இளைஞா் உயிரிழப்பு: கல்லூரி மாணவா் பலத்த காயம்

மக்கள் கூடும் இடங்களில் அதிக கண்காணிப்பு கேமராக்கள்: வேலூா் மாவட்ட எஸ்.பி. உத்தரவு

கிராமங்ளில் குடிநீா் பற்றாக்குறை : ஒன்றியக்குழு தலைவா் ஆய்வு

ஸ்ரீ நிகேதன் மெட்ரிக் பள்ளியில் 399 போ் தோ்ச்சி

திருவள்ளூா் மாவட்டத்தில் 91.32% தோ்ச்சி

SCROLL FOR NEXT