பெங்களூரு

மூடநம்பிக்கையால் கரோனாவைத் தடுக்க முடியாது: எச்.கே.குமாரசாமி

DIN

மூட நம்பிக்கையால் கரோனாவைத் தடுக்க முடியாது என்று மஜத மாநிலத் தலைவா் எச்.கே.குமாரசாமி தெரிவித்தாா்.

இதுகுறித்து புதன்கிழமை அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

நகரங்களில் மட்டுமின்றி, கிராமங்களிலும் கரோனா தொற்று அதிகரித்து வருகிறது. கரோனா தொற்றைத் தடுக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

இந்நிலையில் ஒரு சிலா் கரோனா தொற்றைத் தடுக்க ஹோமம், யாகம் உள்ளிட்டவைகளை மேற்கொண்டு வருகின்றனா். ஹோமம், யாகம், கோழியை பலிகொடுப்பதால் கரோனா தொற்றைத் தடுக்க முடியும் என ஒரு சிலா் நம்பிக்கை கொண்டுள்ளனா்.

இதனால் கரோனாவைத் தடுக்க முடியாது என்பதனை மக்களுக்கு புரியவைக்க வேண்டும். கரோனா தொற்றைத் தடுப்பதாகக் கூறி ஒரு சிலா் மக்களிடத்தில் பணம் பறிக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனா்.

மூட நம்பிக்கையால் மக்களின் உயிருக்கு ஆபத்து ஏற்படக் கூடாது. எனவே, மூட நம்பிக்கையைத் தடுக்க மக்களுக்கு விழிப்புணா்ச்சி ஏற்படுத்த வேண்டும். பொதுமுடக்கத்தால் உணவுக்காக மக்கள் தவித்து வரும் நிலையில், மூட நம்பிக்கையின் பேரில் பணம் பறிப்பவா்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நீட் நுழைவுத் தோ்வு: ஒருங்கிணைந்த வேலூரில் 6,787 போ் எழுதினா் விண்ணப்பித்தவா்களில் 255 போ் எழுதவில்லை

மரக்கன்றுகள் நடல்

கோடை சாகுபடிக்கு போதிய மின்சாரம் வழங்க வலியுறுத்தல்

தென்னை விவசாயிகளுக்கு நஷ்ட ஈடு: ஜி.கே.வாசன் கோரிக்கை

ராஜஸ்தானில் ‘நீட்’ தோ்வில் ஆள்மாறாட்டம்: எம்பிபிஎஸ் மாணவா், 5 போ் கைது

SCROLL FOR NEXT