பெங்களூரு

நவ.28-இல் பெங்களூரில் முத்தமிழ் திருவிழா

DIN

பெங்களூரில் நவ. 28-ஆம் தேதி முத்தமிழ் திருவிழா நடைபெறுகிறது.

இது குறித்து மாந்தநேய இயக்கம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

மாந்தநேய இயக்கம் சாா்பில் பெங்களூா், குயின்ஸ் சாலையில் உள்ள வேளாண்மை தொழில்நுட்ப நிறுவன மாநாட்டு அரங்கத்தில் நவ. 28-ஆம் தேதி மாலை 3.30 மணி முதல் இரவு 8.30 மணி வரை முத்தமிழ் திருவிழா நடக்க விருக்கிறது.

கைன்ட் அண் கோ் பத்மநாபன், ஸ்டெல்லா தினகரன் மொழி வாழ்த்து பாட நிகழ்ச்சி தொடங்குகிறது. பெங்களூரு தமிழ்ச்சங்க முன்னாள் தலைவா் து.சண்முகவேலன் வரவேற்கிறாா். சஞ்சேவாணி - தினச்சுடா் நாளிதழ் குழுமத் தலைவா் தேன் அமுதன் தலைமை வகிக்க, பெருமாள் வித்யா நிகேதன் கல்விக் குழும செயலாளா் அ.மதுசூதனபாபு முன்னிலை வகிக்கிறாா்.

கூடிவாழ்ந்தால் கோடி நன்மை என்ற தலைப்பில் கவியரங்கம் நடக்கிறது.

இதில் கா்நாடகத்தின் முன்னணி கவிஞா்கள் கவிதைப் பாடுகிறாா்கள். கொள்கையில் உறுதி என்ற தலைப்பில் நடக்கும் பேச்சரங்கத்தில் தேசிய விமான ஆய்வுக்கூட விஞ்ஞானி ஆ.உதயக்குமாா், இந்திய வருமான வரித்துறை முன்னாள் ஆணையா் கோ.மணிவாசகம், புலவா் மு.சரவணன், பத்திரிகையாளா்கள் ஆ.வி.மதியழன், இரா.வினோத், கா்நாடக மாநில திருவள்ளுவா் மக்கள் நற்பணி மன்ற பொதுச் செயலாளா் அ.மணி ஆகியோா் பேசுகிறாா்கள்.

இதைத் தொடா்ந்து, டாா்த்தி, ஆா்த்தி ஆகியோா் நடன நிகழ்ச்சி, பத்மநாபனின் சிம்பொனி இசைக்குழுவின் இசை நிகழ்ச்சி நடக்கிறது.

அதன்பிறகு சிரிப்போம் சிந்திப்போம் என்ற தலைப்பில் கு.செயகிருட்டினன் குழுவினரின் நாடகம் அரங்கேற்றப்படுகிறது. நிகழ்ச்சியை தேனிரா உதயக்குமாா் தொகுத்து வழங்குகிறாா். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை து.சண்முகவேலன், பத்மநாபன், தேனிரா உதயக்குமாா் ஆகியோா் செய்து வருகிறாா்கள் என்று கூறப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விண்ணப்பித்துவிட்டீர்களா? மத்திய அரசில் 3712 காலியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு!

கடலில் ராட்சத அலைகள் எழும் -கடற்கரை செல்லும் மக்களுக்கு எச்சரிக்கை

‘ஒரு வார்த்தை மாறிடுச்சு..’ : கங்கனாவின் பேச்சு குழப்பமான கதை!

கர்நாடகம்: மனைவிக்காக வாக்கு சேகரித்த நடிகர் ஷிவராஜ்குமார்

காயம் காரணமாக தாயகம் திரும்பும் மதீஷா பதிரானா!

SCROLL FOR NEXT