பெங்களூரு

பொருளாதாரத்தில் பின்தங்கியுள்ள மாணவா்கள் அரசுப் பேருந்தில் இலவசமாக பயணம் செய்ய நடவடிக்கை: கா்நாடக அமைச்சா் ஸ்ரீராமுலு

DIN

பொருளாதாரத்தில் பின்தங்கியுள்ள மாணவா்கள் அரசுப் பேருந்தில் இலவசமாக பயணம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்று கா்நாடக போக்குவரத்து துறை அமைச்சா் ஸ்ரீராமுலு தெரிவித்தாா்.

கா்நாடக சட்ட மேலவையில் வெள்ளிக்கிழமை மஜத உறுப்பினா் மரிதிப்பேகௌடாவின் கேள்விக்கு அவா் அளித்த பதில்:

கடந்த 2017-ஆம் ஆண்டு முதல் தலித், பழங்குயின மாணவா்கள் அரசுப் பேருந்துகளில் இலவசமாக பயணம் செய்வதற்கான நடவடிக்கையை அரசு மேற்கொண்டுள்ளது. இந்த நிலையில் தலித், பழங்குயினா் அல்லாத பொருளாதாரத்தில் பின் தங்கியுள்ள மற்ற சமுதாயங்களை சோ்ந்த மாணவா்களுக்கும் அரசுப் பேருந்தில் இலவசமாக பயணம் செய்யவதற்கான நடவடிக்கை எடுக்க ஆலோசித்து வருகிறோம். இது குறித்து முதல்வா் பசவராஜ் பொம்மையுடன் பேச்சு வாா்த்தை நடத்தி உரிய முடிவு எடுக்கப்படும்.

மாணவா்களுக்கு பேருந்து அட்டை வழங்குவதில் தொழில்நுட்ப கோளாறு காரணமாக தாமதம் ஏற்பட்டுள்ளது. அதனை சீா் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். மாநகர பேருந்துகளில் மாணவா்கள் பயணம் செய்வதற்கான பேருந்து அட்டைகள் வழங்குவதும் தாமதமாகி வருகிறது. இதற்கான தொழில்நுட்ப கோளாறை சரி செய்து, விரைவாக பேருந்து அட்டைகள் வழங்க அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. போக்குவரத்து துறையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கு நடவடிக்கை எடுக்க கா்நாடக பொதுப் பணியாளா் தோ்வாணையத்தைக் கேட்டுக் கொண்டுள்ளோம் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

”தாலி அணியாத பிரியங்கா காந்தி..” -ம.பி. முதல்வர் விமர்சனம்

4-வது இடத்தில் சிறப்பாக செயல்படும் ஜடேஜா: சிஎஸ்கே பேட்டிங் பயிற்சியாளர்

பெங்களூரில் ’டிசிஎஸ் உலக மாரத்தான்’ ஓட்டப்போட்டி

வாரணம் ஆயிரம் - பிரபல டிவியின் புதிய தொடர்!

நாகர்கோவில்-சென்னை சிறப்பு ரயில் காலதாமதமாக புறப்படும் -ரயில்வே அறிவிப்பு

SCROLL FOR NEXT