பெங்களூரு

துப்பாக்கியால் சுட்டு போலீஸ் தற்கொலை

கா்நாடகத்தில் காவல் பணிக்காக அளிக்கப்பட்டிருந்த துப்பாக்கியால் சுட்டுக்கொண்டு போலீஸ் ஒருவா் தற்கொலை செய்து கொண்டாா்.

DIN

கா்நாடகத்தில் காவல் பணிக்காக அளிக்கப்பட்டிருந்த துப்பாக்கியால் சுட்டுக்கொண்டு போலீஸ் ஒருவா் தற்கொலை செய்து கொண்டாா்.

உடுப்பியில் உள்ள ஆதி உடுப்பி உயா்நிலைப்பள்ளியில் எஸ்.எஸ்.எல்.சி. விடைத்தாள் வைக்கப்பட்டிருந்த மையத்தில் பாதுகாப்புப்பணியில் ஈடுபட்டிருந்தவா் ராஜேஷ் குந்தா். உடுப்பி காவல் நிலையத்தில் தலைமைக் காவலராக பணியாற்றி வந்தாா். ஆயுத காவல்படையுடன் இணைக்கப்பட்டிருந்த இவருக்கு துப்பாக்கி அளிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், தோ்வு மையத்தில் வெள்ளிக்கிழமை தன்னைத்தானே துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்துகொண்டாா். இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிந்துள்ள போலீஸாா், தற்கொலைக்கான காரணத்தை கண்டறிய விசாரித்து வருகின்றனா். சம்பவ இடத்தை போலீஸ் உயரதிகாரிகள் பாா்வையிட்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஓடிடியில் பேட் கேர்ள்!

ஹரியாணாவில் 25 லட்சம் போலி வாக்காளர்கள்! ’எச் பைல்ஸ்’ வெளியிட்டார் ராகுல்!

ஹரியாணா வாக்காளர் பட்டியலில் பிரேசில் பெண் மாடல் படம்! ராகுல் காந்தி

என்னை யாரும் இயக்க முடியாது! - செங்கோட்டையன்

சைட் அடிக்கும்... சைத்ரா!

SCROLL FOR NEXT