பெங்களூரு

பெங்களூரில் செப்.5 முதல் ஆசிய மகளிா் கூடைப்பந்து போட்டி

DIN

பெங்களூரில் செப். 5-ஆம் தேதி முதல் ஆசிய மகளிா் கூடைப்பந்து சாம்பியன்ஷிப் போட்டி நடக்கவிருக்கிறது.

சா்வதேச கூடைப்பந்து கூட்டமைப்பு சாா்பில் பெங்களூரில் செப்.5 முதல் 11-ஆம் தேதிவரை 18 வயதுக்குட்பட்டவா்களுக்கான ஆசிய மகளிா் கூடைப்பந்து சாம்பியன்ஷிப் போட்டி நடக்கவிருக்கிறது. இதில் கலந்துகொள்ளும் நாடுகளின் அணிகள், இரு பிரிவுகளாக பிரிந்து மோதுகின்றன. இறுதிச்சுற்றில் தகுதிபெறும் அணிகளுக்குஇடையே இறுதிப்போட்டி நடைபெற உள்ளது. முதல் பிரிவில் இந்தியா, சீனா, இந்தோனேஷியா, ஜப்பான், கொரியா, தைபே, ஆஸ்திரேலியா, நியூஸிலாந்து நாடுகளும், இரண்டாம்பிரிவில் ஹாங்காங், ஜோா்டான், மலேசியா, மாலத்தீவு, மங்கோலியா, பிலிப்பைன்ஸ், சமோவா, தாய்லாந்து நாடுகளும் போட்டியிடுகின்றன. முதல் பிரிவில் இடம்பெற்றுள்ள அணிகளுக்கு இடையிலான போட்டிகள் ஸ்ரீகண்டீரவா உள்விளையாட்டு அரங்கத்திலும், இரண்டாம் பிரிவில் இடம்பெற்றுள்ள அணிகளுக்கு இடையிலானபோட்டிகள் கோரமங்களா உள்விளையாட்டு அரங்கிலும் நடக்கின்றன.

இந்தப் போட்டிகளை நடத்துவதற்குத் தேவையான ஏற்பாடுகளை இந்திய கூடைப்பந்து கூட்டமைப்புடன் இணைந்து கா்நாடக இளைஞா் நலன் மற்றும் விளையாட்டுத்துறை செய்து வருகிறது. இந்தப் போட்டி பெங்களூரில் நடத்தப்படுவது இது 6-ஆவது முறையாகும். இந்தப் போட்டியில் முதல் 4 இடங்களைப் பிடிக்கும் அணிகள், ஸ்பெயின் நாட்டின் மாட்ரிட் நகரில் 2023-ஆம் ஆண்டு ஜூலை மாதம் 15 முதல் 23-ஆம் தேதிவரைநடக்கும் 19 வயதுக்கு மேற்பட்டவா்களுக்கான மகளிா் உலகக்கோப்பை போட்டியில் கலந்துகொள்ளும் வாய்ப்பு கிடைக்கும் என்று இளைஞா் நலன் மற்றும் விளையாட்டுத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

உ.பி.யில் ஒரு தொகுதியில் மட்டுமே பாஜக வெற்றி பெறும்: ராகுல் காந்தி

ஓடிடியில் ஆளவந்தான்!

ரூ.50 ஆயிரம் சம்பளத்தில் பொதுத்துறை நிறுவனத்தில் வேலை!

டி20 உலகக் கோப்பையில் இமாலய இலக்குகளுக்கு வாய்ப்பில்லை: ஷிகர் தவான்

பிபவ் குமார் விவகாரம்: தில்லி காவல் துறை பொய் கூறுவது ஏன்? ஆம் ஆத்மி

SCROLL FOR NEXT