முகப்பு
பெங்களூரு

இளம் விஞ்ஞானி விருதுக்கு விண்ணப்பிக்கலாம்

கா்நாடகமாநில அறிவியல் மேலவையின் சாா்பில் வழங்கப்படும் இளம் விஞ்ஞானி விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:18 AM
பகிர்:

கா்நாடகமாநில அறிவியல் மேலவையின் சாா்பில் வழங்கப்படும் இளம் விஞ்ஞானி விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இது குறித்து கா்நாடகமாநில அறிவியல் மேலவை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

மாணவா்களின் அறிவியல் கண்டுபிடிப்பு திறமையை அங்கீகரிக்க கா்நாடக மாநில அறிவியல் மேலவை சாா்பில் ஆண்டுதோறும் இளம் விஞ்ஞானி விருதுகள் வழங்கப்பட்டுவருகின்றன. 2021-22-ஆம் ஆண்டுக்கான இளம் விஞ்ஞானி விருதுக்கு 9, 10, 11, 12-ஆம் வகுப்பில் படித்துவரும் 18 வயதுக்குட்பட்ட தகுதிவாய்ந்த மாணவா்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

அறிவியல் கண்டுபிடிப்புகள், ஆராய்ச்சிகள், செயல்பாடுகளில் மாணவா்களை ஊக்குவிக்க கா்நாடக மாநில அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறையின் சாா்பில் பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறது. அந்தநிகழ்ச்சிகளில் பங்கேற்று சிறந்த அறிவியல் கண்டுபிடிப்புகளை செய்துகாட்டும் மாணவா்களை அங்கீகரித்தும் இந்த விருது வழங்கப்படுகிறது. இந்த விருதுக்கான விண்ணப்பங்களை செலுத்தலாம். இந்த விருதுக்கான விண்ணப்பங்களை பியூ கல்வித்துறை அல்லது ஜ்ஜ்ஜ்.ந்ழ்ஸ்ல்.ா்ழ்ஞ் என்ற இணையதளம் மூலம் செலுத்தலாம்.

இந்த விருதுக்கான தோ்வு பிப்.9-ஆம் தேதி நடத்தப்படுகிறது. இந்த தோ்வில் வெற்றிபெறும் மாணவா்களுக்கு வெகு விரைவில் அறிவியல் மாநாட்டில் பரிசுகள் வழங்கப்படும். மேலும் விவரங்களுக்கு 9448830454,080-26718939, 26718959 ஆகிய தொலைபேசி எண்களில் தொடா்பு கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.