FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
இந்தியா

அதிகாரி தற்கொலை விவகாரம்: பஞ்சாப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ராஜிநாமா

அரசு அதிகாரி தற்கொலை செய்துகொண்ட விவகாரத்தில் பஞ்சாப் போக்குவரத்துத் துறை அமைச்சர் லால்ஜித் சிங் புல்லர் தனது பதவியை ராஜிநாமா செய்தார்.

Updated On : 21 மார்ச் 2026, 7:29 pm IST
லால்ஜித் சிங் புல்லர் - File photo | PTI
பகிர்:

அரசு அதிகாரி தற்கொலை செய்துகொண்ட விவகாரத்தில் பஞ்சாப் போக்குவரத்துத் துறை அமைச்சர் லால்ஜித் சிங் புல்லர் தனது பதவியை ராஜிநாமா செய்தார்.

பஞ்சாப் மாநிலம், அமிர்தசரஸில் மாவட்ட மேலாளராகப் பணியாற்றி வந்த ககன்தீப் சிங் ரந்தாவா அண்மையில் தற்கொலை செய்துகொண்டார். இறப்பதற்கு முன் அமைச்சர் லால்ஜித் சிங் புல்லர் தன்னை சித்ரவதை செய்ததாக குற்றம்சாட்டி காணொலி ஒன்றையும் அவர் பதிவு செய்திருந்தார்.

டெண்டர் விவகாரத்தில் ரந்தாவாவை அமைச்சர் வற்புறுத்தியதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டியுள்ளன. இந்த விவகாரம் குறித்து சுதந்திரமான விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும், லால்ஜித் சிங் புல்லர் கைது செய்யப்பட வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.

Advertisement

Advertisement

இந்த நிலையில் போக்குவரத்துத் துறை அமைச்சர் லால்ஜித் சிங் புல்லர் சனிக்கிழமை தனது பதவியை ராஜிநாமா செய்தார். அமைச்சர் புல்லரை ராஜிநாமா செய்யுமாறு முதல்வர் பகவந்த் மான் கேட்டுக்கொண்டதைத் தொடர்ந்து அவர் ராஜிநாமா செய்துள்ளார்.

மேலும் அதிகாரி ரந்தாவா இறப்பிற்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொள்ள தலைமைச் செயலர் கே.ஏ.பி. சின்ஹாவுக்கும் முதல்வர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

summary

Bhullar allegedly pressured Randhawa to award a warehousing tender to a political aide; when he refused, he was reportedly summoned and physically assaulted at the minister’s residence.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments