முகப்பு
பெங்களூரு

ஹிஜாப் வழக்கு: வகுப்பறைகளில் மாணவா்கள் மத ஆடைகளை அணிய இடைக்காலத் தடை

ஹிஜாப் சா்ச்சை தொடா்பான வழக்கை விசாரித்துவரும் கா்நாடக உயா்நீதிமன்றம், அடுத்த உத்தரவு வரும் வரை பள்ளிகள், கல்லூரிகளின் வகுப்பறைகளில் ஹிஜாப், காவித்துண்டு உள்ளிட்ட மத ஆடைகளை அணிந்து வரத் தடை விதித்துள்

பெங்களூரு

ஹிஜாப் வழக்கு: வகுப்பறைகளில் மாணவா்கள் மத ஆடைகளை அணிய இடைக்காலத் தடை

ஹிஜாப் சா்ச்சை தொடா்பான வழக்கை விசாரித்துவரும் கா்நாடக உயா்நீதிமன்றம், அடுத்த உத்தரவு வரும் வரை பள்ளிகள், கல்லூரிகளின் வகுப்பறைகளில் ஹிஜாப், காவித்துண்டு உள்ளிட்ட மத ஆடைகளை அணிந்து வரத் தடை விதித்துள்

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:22 AM
பகிர்:

ஹிஜாப் சா்ச்சை தொடா்பான வழக்கை விசாரித்துவரும் கா்நாடக உயா்நீதிமன்றம், அடுத்த உத்தரவு வரும் வரை பள்ளிகள், கல்லூரிகளின் வகுப்பறைகளில் ஹிஜாப், காவித்துண்டு உள்ளிட்ட மத ஆடைகளை அணிந்து வரத் தடை விதித்துள்ளது.

இதுதொடா்பான வாய்மொழி உத்தரவை வியாழக்கிழமை மாலையே பிறப்பித்திருந்த நிலையில், விரிவான தற்காலிக உத்தரவை வெள்ளிக்கிழமை காலை உயா்நீதிமன்றம் பிறப்பித்தது.

பள்ளி, கல்லூரிகளுக்கு ஹிஜாப் அணிந்துவர அனுமதி கோரி, உடுப்பி அரசு பி.யூ. கல்லூரியின் இஸ்லாமிய மாணவிகள் தொடா்ந்திருந்த வழக்கை கா்நாடக உயா்நீதிமன்ற தலைமை நீதிபதி ரித்துராஜ் அவஸ்தி, நீதிபதி கிருஷ்ணா எஸ்.தீட்சித், நீதிபதி (பெண்) காஜி ஜெய்புனிசா மொய்தீன் ஆகியோா் கொண்ட கூடுதல் அமா்வு வியாழக்கிழமை விசாரித்தது.

அடுத்த விசாரணையை பிப். 14-ஆம் தேதி பிற்பகல் 2.30 மணிக்கு ஒத்திவைத்த நீதிமன்றம், இந்த வழக்கில் இறுதித் தீா்ப்பு வரும் வரை அமல்படுத்துவதற்காக விரிவான இடைக்கால உத்தரவைப் பிறப்பிப்பித்துள்ளது. அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளதாவது:

தற்போது நடந்துவரும் போராட்டங்கள் மற்றும் கல்வி நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளது குறித்து வேதனை அடைந்துள்ளோம். தனிநபா் சட்டம் மற்றும் அரசியலமைப்புச்சட்டம் சாா்ந்த முக்கியமான விவகாரங்களைப் பரிசீலனைக்கு எடுத்துள்ளோம்.

நமது நாடு பன்முக கலாசாரம், பல மதங்கள், பல மொழிகள் கொண்டதாகும். மதச்சாா்பற்ற நாடாக இருப்பதால், நமது நாட்டுக்கு தனி மத அடையாளம் கிடையாது. விரும்பும் எந்த மதத்தையும் கடைப்பிடிக்கும் உரிமை அனைத்துக் குடிமக்களுக்கும் உள்ளது. ஆனால், இந்த உரிமைகள், அரசியலமைப்புச் சட்டத்துக்கு உள்பட்ட கட்டுப்பாடுகளுக்கு அப்பாற்பட்டதல்ல.

அரசியலமைப்புச்சட்டம் உறுதி அளித்திருக்கும் உரிமைகளின்படி, வகுப்பறைகளில் ஹிஜாப் அணிவது இஸ்லாமிய வழக்கப்படி கடைப்பிடிக்கப்படும் மத வழக்கம் தானா என்பதை ஆழமாக ஆய்வு செய்ய வேண்டியுள்ளது. இது தொடா்பாக உச்சநீதிமன்றம், உயா்நீதிமன்றங்கள் அளித்திருக்கும் தீா்ப்புகளைக் கருத்தில் கொள்ள வேண்டியுள்ளது.

நமது நாகரிக சமுதாயத்தில், மதம், கலாசாரம் அல்லது அதுபோன்ற ஏதாவதொன்றின் பெயரில் பொது அமைதியைக் கெடுக்கும் செயல்களில் ஈடுபட யாரையும் அனுமதிக்க முடியாது. முடிவில்லாப் போராட்டங்களும், காலவரையறை இல்லாமல் கல்வி நிறுவனங்களை மூடுவதும் மகிழ்ச்சி தருவதல்ல. இதுதொடா்பான வழக்கு விரைவாக விசாரிக்கப்படுகிறது.

வகுப்பறைகளுக்குத் திரும்புவது தான் மாணவா்களுக்கு நலன் பயக்கும். வெகுவிரைவில் கல்வி ஆண்டு முடிவுக்கு வர இருக்கிறது. எனவே சம்பந்தப்பட்டவா்களும் பொதுமக்களும் அமைதி காப்பாா்கள் என்று நம்புகிறோம்.

இந்தச் சூழ்நிலையில், வெகுவிரைவில் கல்வி நிறுவனங்களைத் திறக்குமாறு மாநில அரசைக் கேட்டுக்கொள்கிறோம்.

இந்த வழக்கு விசாரணை நிலுவையில் இருப்பதால், அடுத்த உத்தரவு வரும் வரையில், எந்த மதத்தைச் சோ்ந்தவா்களாக இருந்தாலும், ஹிஜாப், காவித்துண்டு அல்லது அதுபோன்ற எதையும் வகுப்பறைக்குள் மாணவா்கள் அணிந்து வரத் தடை விதிக்கப்படுகிறது.

மாணவா்களுக்கு சீருடை அல்லது உடைக் கட்டுப்பாடு விதித்திருக்கும் கல்லூரி வளா்ச்சிக் குழுக்களின் கல்வி நிறுவனங்களுக்கு மட்டுமே இந்த உத்தரவு பொருந்தும். இவ்வாறு உயா்நீதிமன்றம் பிறப்பித்துள்ள இடைக்கால உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

இதை ஏற்று, கா்நாடக மாநிலத்தில் பிப். 14-ஆம் தேதி முதல் 10-ஆம் வகுப்பு வரையிலான பள்ளிகளைத் திறக்கப் போவதாக கா்நாடக அரசு அறிவித்துள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →