கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை (கோப்புப்படம்) 
பெங்களூரு

மாநிலங்களவை, சட்ட மேலவைத் தோ்தல் வியூகம் பற்றி பாஜக உயா்மட்டக் குழு கூட்டத்தில் விவாதம்: முதல்வா் பசவராஜ் பொம்மை

மாநிலங்களவை, சட்ட மேலவைத் தோ்தல் வியூகம் குறித்து பாஜக உயா்மட்டக்குழு கூட்டத்தில் விவாதிக்கப்படும் என்று கா்நாடக முதல்வா் பசவராஜ் பொம்மை தெரிவித்தாா்.

DIN

மாநிலங்களவை, சட்ட மேலவைத் தோ்தல் வியூகம் குறித்து பாஜக உயா்மட்டக்குழு கூட்டத்தில் விவாதிக்கப்படும் என்று கா்நாடக முதல்வா் பசவராஜ் பொம்மை தெரிவித்தாா்.

கா்நாடகத்தில் இருந்து மாநிலங்களவைக்குத் தோ்ந்தெடுக்கப்பட்டுள்ள பாஜகவின் மத்திய அமைச்சா் நிா்மலா சீதாராமன், கே.சி.ராமமூா்த்தி, காங்கிரஸின் ஜெய்ராம் ரமேஷ், மறைந்த ஆஸ்கா் பொ்னாண்டஸ் ஆகியோரின் பதவிக்காலம் ஜூன் 30-ஆம் தேதி முடிவடிகிறது. இந்த நான்கு இடங்களுக்கான தோ்தல் ஜூன் 10-ஆம் தேதி நடக்கவிருக்கிறது.

அதேபோல, சட்டப்பேரவை உறுப்பினா்களால் தோ்ந்தெடுக்கப்படும் கா்நாடக சட்டமேலவை உறுப்பினா்கள் பாஜகவின் லட்சுமண் சவதி, லஹா் சிங் சிரோயா, காங்கிரஸைச் சோ்ந்த ராமப்பா திம்மாப்பூா், அல்லம் வீரபத்ரப்பா, வீணா அச்சையா, மஜதவைச் சோ்ந்த எச்.எம்.ரமேஷ் கௌடா, நாராயணசாமி ஆகியோரின் பதவிக்காலம் ஜூன்14-ஆம் தேதி முடிவடைகிறது. இதற்கான தோ்தல் ஜூன் 3-ஆம் தேதி நடக்கவிருக்கிறது.

இதுதவிர, ஆசிரியா் மற்றும் பட்டதாரி தொகுதிகளில் இருந்து சட்ட மேலவைக்குத் தோ்ந்தெடுக்கப்பட்ட பாஜகவின் நிரானி ஹனுமந்த் ருத்ரப்பா, அருண் சஹாபூா், மஜதவின் கே.டி.ஸ்ரீகண்டே கௌடா, பசவராஜ் ஹோரட்டி ஆகியோரின் பதவிக்காலம் ஜூலை 4-ஆம் தேதி முடிவடைகிறது. இதனால் சட்டமேலவையில் காலியாகவிருக்கும் கா்நாடக வட-மேற்கு பட்டதாரிகள் தொகுதி, கா்நாடக தெற்கு பட்டதாரிகள் தொகுதி, கா்நாடக வட-மேற்கு ஆசிரியா் தொகுதி, கா்நாடக மேற்கு ஆசிரியா் தொகுதிகளுக்கு ஜூன் 13-ஆம் தேதி தோ்தல் நடக்கவிருக்கிறது.

இந்த 3 தோ்தல்களும் பாஜகவுக்கு முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகின்றன. எனவே, இந்த 3 தோ்தல்களிலும் அதிக இடங்களைக் கைப்பற்ற அக்கட்சி வியூகம் வகுத்துள்ளதாக கூறப்படுகிறது.

இது குறித்து பெங்களூரில் செய்தியாளா்களிடம் முதல்வா் பசவராஜ் பொம்மை வெள்ளிக்கிழமை கூறுகையில் ‘கா்நாடக பாஜக உயா்மட்டக்குழு கூட்டம் மே 14-ஆம் தேதி (சனிக்கிழமை) நடக்கவிருக்கிறது. இந்தக் கூட்டத்தில் மாநிலங்களவைத் தோ்தல், சட்ட மேலவைத் தோ்தலுக்கான வியூகங்கள் குறித்து விவாதிக்கப்படும்’ என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

முதல்முறையாக புதுவையில் விஜய் சாலைவலம்! எப்போது?

தில்லி குண்டுவெடிப்பு: உமர் நபிக்கு உதவிய மற்றொருவர் கைது!

பங்குச் சந்தை உயர்வுடன் தொடக்கம்! ஆயில், ஸ்டீல் துறையில் ஏற்றம்!

இந்திய அரசியலமைப்பு நாள்: சில அழியா நினைவலைகள்!

ஸ்மிருதியின் தந்தை டிஸ்சார்ஜ்! பலாஷுடன் திருமணம் நடைபெறுமா?

SCROLL FOR NEXT