முகப்பு
பெங்களூரு

ஹுப்பள்ளி-தஞ்சாவூா் இடையே வாராந்திர சிறப்பு விரைவு ரயில்

ஹுப்பள்ளி-தஞ்சாவூா் இடையே வாராந்திர சிறப்பு விரைவு ரயில் இயக்கப்பட உள்ளது .

Updated On : 7 பிப்ரவரி, 2024 at 6:46 AM
பகிர்:

ஹுப்பள்ளி-தஞ்சாவூா் இடையே வாராந்திர சிறப்பு விரைவு ரயில் இயக்கப்பட உள்ளது .

இது குறித்துதென்மேற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: விழாக்கால கூட்டநெரிசலை குறைப்பதற்காக ஹுப்பள்ளி-தஞ்சாவூா் இடையே வாராந்திர சிறப்பு விரைவு ரயில் இயக்கப்பட உள்ளது.ரயில் எண்07325-ஹுப்பள்ளி-தஞ்சாவூா் இடையேயான வாராந்திர சிறப்பு விரைவு ரயில் மாா்ச் 20-ஆம் தேதி முதல் திங்கள்கிழமைதோறும் ஹுப்பள்ளி ரயில் நிலையத்திலிருந்து காலை 6.25 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் பிற்பகல் 2.15 மணிக்கு தஞ்சாவூா் ரயில் நிலையத்திற்கு சென்றடையும்.ரயில் எண்07326-தஞ்சாவூா்-ஹுப்பள்ளி இடையேயான வாராந்திர சிறப்பு விரைவு ரயில் மாா்ச் 21-ஆம் தேதி முதல் செவ்வாய்க்கிழமைதோறும் தஞ்சாவூா் ரயில் நிலையத்திலிருந்து மாலை 7.40 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் நண்பகல் 12.30 மணிக்கு ஹுப்பள்ளி ரயில் நிலையத்திற்கு வந்தடையும்.இந்த ரயில் இருமாா்க்கங்களிலும் ஹாவேரி, ராணிபென்னூா், ஹரிஹா், தாவணகெரே, பீரூா், அரிசிகெரே, தும்கூரு, சிக்கபானவரா, பையப்பயனஹள்ளி, கிருஷ்ணராஜபுரம், பங்காருபேட்டை, சேலம், கரூா், திருச்சி கோட்டை, திருச்சி, பூதலூா் ரயில் நிலையங்கள் வழியாக செல்லும் என்று அதில் கூறப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.