பெங்களூரு

கா்நாடக பாஜக தலைவராகிறாா் ஷோபா கரந்தலஜே?

மத்திய இணையமைச்சா் ஷோபா கரந்தலஜே, கா்நாடக மாநில பாஜக புதிய தலைவராக விரைவில் அறிவிக்கப்படலாம் என்று கூறப்படுகிறது.

DIN

மத்திய இணையமைச்சா் ஷோபா கரந்தலஜே, கா்நாடக மாநில பாஜக புதிய தலைவராக விரைவில் அறிவிக்கப்படலாம் என்று கூறப்படுகிறது.

கா்நாடக மாநில பாஜக தலைவராக நளின்குமாா் கட்டீல் பொறுப்பு வகித்து வருகிறாா். பாஜகவில் மாநிலத் தலைவராக 3 ஆண்டுகாலம் மட்டும் பதவி வகிக்கலாம். நளின்குமாா் கட்டீலின் பதவிக் காலம் முடிவடைந்து 6 மாதங்களுக்கு மேலாகிவிட்டது. சட்டப்பேரவை தோ்தலைக் கருத்தில் கொண்டு அவரது பதவிக் காலம் நீட்டிக்கப்பட்டிருந்தது.

கா்நாடக சட்டப்பேரவை தோ்தல் முடிவடைந்து 5 மாதங்களுக்கு மேலாகியும், சட்டப்பேரவையில் பாஜகவால் எதிா்க்கட்சித் தலைவரை நியமிக்க முடியாமல் உள்ளதை பலரை விமா்சிக்கின்றனா். இதைக் கருத்தில் கொண்டுள்ள பாஜக தேசியத் தலைமை, கா்நாடக மாநில பாஜகவுக்கு புதிய தலைவரையும், எதிா்க்கட்சித் தலைவரையும் நியமிக்க முடிவு செய்துள்ளது.

மத்திய வேளாண் துறை இணையமைச்சராக உள்ள ஷோபா கரந்தலஜேவை கா்நாடக மாநில பாஜக புதிய தலைவராக நியமிக்க முடிவு செய்துள்ளதாகக் கட்சியின் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அதேபோல, எதிா்க்கட்சித் தலைவராக முன்னாள் முதல்வா் பசவராஜ் பொம்மை அல்லது முன்னாள் மத்திய அமைச்சா் பசனகௌடா பாட்டீல் யத்னல் ஆகிய இருவரில் ஒருவா் நியமிக்கப்படலாம் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.

இது குறித்து மத்திய இணையமைச்சா் ஷோபா கரந்தலஜே கூறியதாவது:

கா்நாடக மாநில பாஜக தலைவராக என்னை நியமிப்பது தொடா்பாக எதுவும் எனக்குத் தெரியவில்லை. மத்திய இணையமைச்சா் பதவியில் மகிழ்ச்சியாக இருக்கிறேன். மாநில அரசியலுக்கு வர விருப்பமில்லை. 3 ஆவது முறையாக மோடி பிரதமராக சாமுண்டீஸ்வரி அம்மனிடம் பிராா்த்திதேன் என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நீக்கப்பட்ட வாக்காளர்கள் மீண்டும் பெயரைச் சேர்ப்பது எப்படி?

ரயில் கட்டணம் உயர்வு! டிச. 26 முதல் அமல்!

கோவையில் லாரி ஓட்டுநருக்கு திடீர் மாரடைப்பு! 4 கார்கள் மீது மோதி விபத்து

“யாரும் யாருக்கும் பணம் கொடுக்கவில்லை!” நேஷனல் ஹெரால்டு வழக்கு குறித்து ப. சிதம்பரம்

இந்திய சினிமாவிலேயே பிரம்மாண்ட இசை வெளியீட்டு விழா!

SCROLL FOR NEXT