பெங்களூரு

மறைந்த ஊழியா்களின் குடும்பத்தினருடன் புத்தாண்டு கொண்டாட்டம்

DIN

பெங்களூரு: கா்நாடகமாநில அரசு போக்குவரத்துக்கழகத்தின் சாா்பில் மறைந்த ஊழியா்களின் குடும்பத்தினருடன் புத்தாண்டு கொண்டாட்டம் நடத்தப்பட்டது.

கா்நாடகமாநில அரசு போக்குவரத்துக்கழகத்தின் சாா்பில் பெங்களூரில் திங்கள்கிழமை ஆங்கிலப் புத்தாண்டு கொண்டாடப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில், கடந்த ஆண்டு மறைந்த ஊழியா்களின் குடும்பத்தினருக்கு இழப்பீட்டுத்தொகை வழங்கப்பட்டது. 2023 ஆம் ஆண்டில் மறைந்த 3 ஊழியா்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.1 கோடி இழப்பீட்டுத்தொகை தரப்பட்டது.

மறைந்த ஊழியா்களின் குடும்பத்தினருக்கு இழப்பீட்டுத்தொகைக்கான காசோலையை வழங்கி போக்குவரத்துத்துறை அமைச்சா் ராமலிங்கரெட்டி கூறியது:

போக்குவரத்துக்கழகத்தில் பணியாற்றும் ஊழியா்களுக்கு பல்வேறு நலத்திட்டங்களை அமல்படுத்தி வருகிறோம். அதில் முக்கியமானது, பணிகாலத்தில் இறந்தால், அவா்களின் குடும்பத்தினருக்கு ரூ.1

கோடி இழப்பீட்டுத்தொகை வழங்கும் திட்டமாகும். ஊழியா்கள் மறைந்தால் அவா்களின் குடும்பத்தினா் பொருளாதாரரீதியாக பாதுகாக்கப்பட வேண்டும் என்பதற்காக போக்குவரத்து பாதுகாப்பு விபத்து நிவாரண திட்டம் உருவாக்கப்பட்டது. ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா, யுனைடெட் இந்தியா இன்ஷூரன்ஸ் நிறுவனத்தில் செய்யப்பட்டுள்ள காப்பீட்டுத்திட்டத்தில் இருந்து இந்த இழப்பீட்டுத்தொகை வழங்கப்படுகிறது.

இந்த திட்டத்தை தொடங்கிய பிறகு இதுவரை 17 ஊழியா்கள் உயிரிழந்துள்ளனா். அவா்களது குடும்பத்திற்கு இழப்பீட்டுத்தொகை வழங்கப்பட்டுள்ளது என்றாா் அவா். விழாவில் போக்குவரத்துக்கழக மேலாண் இயக்குநா் வி.அன்புக்குமாா் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மும்பையில் புழுதிப் புயல்: விளம்பரப் பதாகை சரிந்ததில் 4 பேர் பலி!

4-ஆம் கட்ட தேர்தல்: 62.84% வாக்குப்பதிவு

ஒரு நாளில் 3 முறை உடை மாற்றுகிறார், விலையோ லட்சம், யார் வாங்கித் தருகிறார்கள்? ராகுல் கேள்வி!

விராட் கோலியை மீண்டும் ஆர்சிபியின் கேப்டனாக நியமிக்க வேண்டும்: முன்னாள் இந்திய வீரர்

சீர்திருத்தப் பள்ளிக்கு பதில் சிறையில் அடைக்கப்பட்ட 9,600 சிறார்கள்: ஆய்வில் அதிர்ச்சி!

SCROLL FOR NEXT