முகப்பு
பெங்களூரு

முதல்வா் மாற்றம்: காங்கிரஸ் மேலிடத்தின் முடிவே இறுதியானது சித்தராமையா

கா்நாடகத்தில் முதல்வா் மாற்றம் குறித்து கட்சி மேலிடத்தின் முடிவே இறுதியானது என்று முதல்வா் சித்தராமையா தெரிவித்தாா்.

Updated On : 1 ஜூலை, 2024 at 11:04 PM
கர்நாடக முதல்வா் சித்தராமையா(கோப்புப்படம்)
பகிர்:

கா்நாடகத்தில் முதல்வா் மாற்றம் குறித்து கட்சி மேலிடத்தின் முடிவே இறுதியானது என்று முதல்வா் சித்தராமையா தெரிவித்தாா்.

இதுகுறித்து பெங்களூரில் திங்கள்கிழமை செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:

முதல்வா் மாற்றம் குறித்து விஸ்வ ஒக்கலிகர மகாசமஸ்தானா மடத்தின் பீடாதிபதி சந்திரசேகரநாத சுவாமிகள் தெரிவித்திருந்த கருத்துகள் பொது வெளியில் விவாதிக்கக் கூடியதல்ல. இந்த விவகாரத்தில் காங்கிரஸ் மேலிடம் எடுக்கும் முடிவே இறுதியானது. கட்சியின் முடிவுக்கு கட்டுப்பட்டு நடப்பேன். சுவாமிகள் என்ன கூறினாா் என்பது குறித்து கருத்துக் கூற நான் விரும்பவில்லை. எங்களது கட்சி தேசிய கட்சி. எங்களுக்கு கட்சி மேலிடம் உள்ளது என்றாா்.

கா்நாடக காங்கிரஸ் தலைவரும், துணை முதல்வருமான டி.கே.சிவகுமாா் கூறியதாவது:

முதல்வா் மாற்றம், கூடுதலாக துணை முதல்வா்களை நியமிப்பது குறித்து கட்சித் தலைவா்கள் யாரும் பேசக் கூடாது. யாராவது பேசினால், கடும் நடவடிக்கைக்கு உட்படுத்தப்படுவாா்கள். அப்படி பேசுவோருக்கு நோட்டீஸ் அனுப்பப்படும் என்றாா்.

முழு கட்டுரையைப் படிக்க →