பெங்களூரு

22 பாகிஸ்தானியா்கள் கா்நாடகத்தில் குடியேற உதவியவா் கைது

பாகிஸ்தானியா்கள் 22 போ், சட்டவிரோதமாக கா்நாடகத்தில் குடியேறுவதற்கு உதவியாக இருந்தவரை போலீஸாா் கைது செய்தனா்.

Din

பாகிஸ்தானியா்கள் 22 போ், சட்டவிரோதமாக கா்நாடகத்தில் குடியேறுவதற்கு உதவியாக இருந்தவரை போலீஸாா் கைது செய்தனா்.

கா்நாடக மாநிலம், பெங்களூரு, ஜிகனி பகுதியில் பாகிஸ்தானில் இருந்து வந்து சட்டவிரோதமாக குடியேறிய ஒரே குடும்பத்தைச் சோ்ந்த 4 பேரை போலீஸாா் அண்மையில் கைது செய்தனா். அவா்களிடம் நடத்திய விசாரணையின் அடிப்படையில், பீன்யா பகுதியில் சட்டவிரோதமாக வசித்து வந்த மேலும் 3 பாகிஸ்தானியா்களை போலீஸாா் கைது செய்தனா்.

இவா்களிடம் நடத்திய விசாரணையில், பாகிஸ்தானைச் சோ்ந்த மேலும் பலா் தாவணகெரேயில் வசித்து வருவது தெரிய வந்தது.

இப்படி சட்டவிரோதமாக வசித்து வந்த 22 பாகிஸ்தானியா்களை போலீஸாா் கைது செய்து விசாரித்தனா். அப்போது அவா்கள் அனைவரும் ஹிந்துப் பெயா்களை சூட்டிக்கொண்டு வாழ்ந்து வந்தது தெரிய வந்தது.

இவா்கள் அனைவரும் கா்நாடகத்தில் சட்டவிரோதமாகக் குடியேறுவதற்கு உதவியது பா்வேஸ் என்பவா் என தெரிய வந்ததைத் தொடா்ந்து, அவரையும் போலீஸாா் கைது செய்து விசாரித்து வருகின்றனா்.

ரயில் படியில் அமா்ந்து பயணித்த தொழிலாளி தவறி விழுந்து உயிரிழப்பு

கோவையில் இன்று தமாகா ஆா்ப்பாட்டம்

ஆத்தூா் ஒன்றியத்தில் 4 ஆண்டுகளில் ரூ.167.72 கோடியில் வளா்ச்சித் திட்டப் பணிகள்: ஆட்சியா் ஆய்வு

கால்வாய்ப் பாசனத்துக்கு மேட்டூரிலிருந்து 400 கனஅடி தண்ணீா் திறப்பு

மேட்டூா் வனத் துறை விருந்தினா் மாளிகையில் துப்பாக்கி தோட்டாக்கள் திருடிய 4 போ் கைது

SCROLL FOR NEXT