முகப்பு
பெங்களூரு

ஜன. 6-ல் கர்நாடக முதல்வராக டி.கே. சிவகுமாா்: காங்கிரஸ் எம்எல்ஏ இக்பால் அன்சாரி

கா்நாடக துணை முதல்வா் டி.கே. சிவகுமாா் வரும் ஜன. 6 ஆம் தேதி முதல்வராக பதவியேற்பாா்: காங்கிரஸ் எம்எல்ஏ இக்பால் அன்சாரி

Updated On : 30 டிசம்பர், 2025 at 12:48 AM
கர்நாடக துணை முதல்வர் டி.கே. சிவக்குமார் - கோப்புப் படம்
பகிர்:

கா்நாடக துணை முதல்வா் டி.கே. சிவகுமாா் வரும் ஜன. 6 ஆம் தேதி முதல்வராக பதவியேற்பாா் என காங்கிரஸ் எம்எல்ஏ இக்பால் அன்சாரி தெரிவித்தாா்.

2023-ஆம் ஆண்டு கர்நாடகத்தில் நடைபெற்ற தேர்தலில் வெற்றி பெற்று காங்கிரஸ் ஆட்சிக்கு வந்த போது, முதல் இரண்டரை ஆண்டுகள் சித்தராமையாவும், இரண்டாவது இரண்டரை ஆண்டுகள் டி.கே. சிவகுமாரும் முதல்வராகப் பதவிவகிக்க காங்கிரஸ் மேலிடத் தலைவர்கன் முன்னிலையில் ஒப்பந்தம் செய்துகொண்டதாக அரசியல் வட்டாரங்களில் கூறப்படுகிறது.

அதன்படி, நவ. 20ஆம் தேதி இரண்டரை ஆண்டுகால பதவியை நிறைவுசெய்துள்ள சித்தராமையா, தனது பதவியை டி.கே. சிவகுமாருக்கு விட்டுத்தருவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. இந்த விவகாரத்தில் சித்தராமையா மற்றும் டி.கே. சிவகுமார் ஆதரவாளர்கள் இடையே கருத்து மோதல் நடந்து வருகிறது.

Advertisement

டி.கே.சிவகுமாருக்கு முதல்வர் பதவியை விட்டுத் தருமாறு அவரது ஆதரவு எம்எல்ஏக்கள் சித்தராமையாவை வலியுறுத்தி வருகின்றனர். இந்த விவகாரத்தை உள்ளூர் அளவிலேயே தீர்த்துக்கொள்ள வேண் டும். இதில் கட்சி மேலிடத்துக்கு எவ்வித சம்பந்தமும் இல்லை என்று அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கூறியுள் ளார்.

இந்நிலையில், 5 ஆண்டுகளுக்கும் தானே முதல்வராக நீடிக்கப் போவதாக சித்தராமையா அறிவித்துள்ளார்.

மேலும், முதல்வர் பதவிக்காக அவசரப்படவில்லை என்று டி.கே. சிவகுமாரும் கூறினார். இதனால் அதுதொடர்பான விவாதங்கள் குறைந்திருந்த நிலையில் ஜன. 6-ஆம் தேதி டி.கே.சிவகுமார் முதல்வராகப் பதவியேற்பார் என்று 2 வாரங்களுக்கு முன்பு கூறியிருந்த அதே கருத்தை காங்கிரஸ் எம்எல்ஏ இக்பால் அன்சாரி திங்கள்கிழமையும் கூறியுள்ளார்.

இதுகுறித்து ராமநகரில் செய்தி யாளர்களிடம் அவர் மேலும் கூறியதாவது: நான் ஏற்கெனவே கூறியபடி, ஜன. 6 அல்லது 9-ஆம் தேதி தற் போதைய துணை முதல்வர் டி.கே. சிவகுமார் முதல்வராகப் பதவியேற்பார். இதை என் விருப்பப்படி கூறவில்லை. சிலவற்றை முன்கூட்டியே கணிக்கும் ஆற்றலை கடவுள் சிலருக்கு அளித்துள்ளார்.

அதன்படி, சரணர் (பசவண்ணர் கருத்துகளை கூறும் துறவி) ஒருவரிடம் நான் கேட்டறிந்தபடி முதல்வராக டி.கே. சிவகுமார் பதவியேற்றுக் கொள்வார் என்று கூறுகிறேன். இது நடக்கும் என்ற நம்பிக்கை எனக்குள்ளது. மழை வருவதை சிலர் முன்கூட்டியே கணிப்பதில்லையா. அதுபோலத்தான் டி.கே. சிவகுமார் முதல்வராவதையும் சரணர்கள் கணித்திருக்கிறார்கள் என்றார் அவர்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments