முகப்பு
இந்தியா

கர்நாடக துணை முதல்வரைச் சந்தித்த வேடன்!

கர்நாடக துணை முதல்வர் டி.கே. சிவகுமாரை பாடகர் வேடன் நேரில் சந்தித்துள்ளது குறித்து...

Updated On : 27 மார்ச் 2026, 9:10 pm IST
கர்நாடக துணை முதல்வர் டி.கே. சிவகுமாருடன் பாடகர் வேடன்...
பகிர்:

கர்நாடக துணை முதல்வர் டி.கே. சிவகுமாரை பிரபல ராப் பாடகர் வேடன் நேரில் சந்தித்து உரையாடியுள்ளார்.

மலையாள மற்றும் தமிழ்த் திரையுலகின் முன்னணி பாடகர் வேடன். மஞ்ஞுமல் பாய்ஸ், நரிவேட்டை, பைசன் உள்ளிட்ட படங்களில் இவர் பாடிய பாடல்கள் மாபெரும் வெற்றியடைந்தன.

இத்துடன், ஒடுக்கப்பட்ட மக்களின் துயரங்கள் குறித்தும், சமூக நீதி கொள்கைகள் குறித்தும் வேடன் பாடிய பாடல்கள் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளன.

Advertisement

இந்த நிலையில், வியாழக்கிழமை (மார்ச் 26) அன்று கர்நாடகத்தின் துணை முதல்வர் டி.கே. சிவக்குமாரின் இல்லத்தில் அவரை பாடகர் வேடன் நேரில் சந்தித்து உரையாடியதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்தில், பாடகர் வேடன் தனது நீண்ட நாள் காதலியான எழுத்தாளர் நவமி லதாவை பதிவுத் திருமணம் செய்துகொண்டார். அவர்களுக்குப் பல்வேறு அரசியல் தலைவர்கள் மற்றும் பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்து வந்தது குறிப்பிடத்தக்கது.

summary

famous rapper Vedan personally met and interacted with Karnataka Deputy Chief Minister D.K. Shivakumar .

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.