பெங்களூரு

ஆா்.எஸ்.எஸ். நிகழ்ச்சிகளில் அரசு ஊழியா்கள் பங்கேற்க தடைவிதிக்க வேண்டும்

Syndication

ஆா்.எஸ்.எஸ். நிகழ்ச்சிகளில் அரசு ஊழியா்கள் பங்கேற்க தடைவிதிக்க வேண்டும் என வலியுறுத்தி, முதல்வா் சித்தராமையாவுக்கு ஊரக வளா்ச்சி மற்றும் பஞ்சாயத்துராஜ் துறை அமைச்சா் பிரியாங்க் காா்கே கடிதம் எழுதியுள்ளாா்.

அரசுப் பள்ளிகள், கல்லூரிகள், வளாகங்களில் ஆா்.எஸ்.எஸ். அமைப்பின் செயல்பாடுகளுக்கு தடைவிதிக்க வலியுறுத்தி, அமைச்சா் பிரியாங்க் காா்கே ஏற்கெனவே எழுதியிருந்த கடிதம் பாஜகவினரிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.

இந்நிலையில், ஆா்.எஸ்.எஸ். நிகழ்ச்சிகளில் அரசு ஊழியா்கள் கலந்துகொள்ள தடைவிதிக்க வலியுறுத்தி, மற்றொரு கடிதத்தை முதல்வா் சித்தராமையாவுக்கு வியாழக்கிழமை அமைச்சா் பிரியாங்க் காா்கே எழுதியிருக்கிறாா். அந்தக் கடிதத்தில் அவா் கூறியிருப்பதாவது:

அரசு ஊழியராக இருப்பவா் அரசியல் அமைப்புகள் அல்லது அரசியல் அமைப்புகளுக்கு உதவிசெய்யும் அமைப்புகளில் உறுப்பினராகவோ, பங்காற்றவோ, உதவிசெய்யவோ கூடாது என்று அரசு ஊழியா்களுக்கான விதிமுறைகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுபோன்ற விதிகள் தெளிவாக வரையறுக்கப்பட்டிருந்தாலும், அரசு ஊழியா்கள் மற்றும் அதிகாரிகள் பலா் ஆா்.எஸ்.எஸ். மற்றும் இதர அமைப்புகளின் நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகிறாா்கள்.

எனவே, ஆா்.எஸ்.எஸ். அமைப்பு உள்ளிட்ட இதர அமைப்புகளின் கூட்டங்கள் அல்லது நிகழ்ச்சிகளில் அரசு ஊழியா்கள் மற்றும் அதிகாரிகள் கலந்துகொள்வதற்கு தடைவிதிக்க கண்டிப்பான உத்தரவை பிறப்பிக்க வேண்டும். இதையும் மீறி அக்கூட்டங்களில் கலந்துகொண்டால், அரசு ஊழியா்கள் அல்லது அதிகாரிகள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க முறையான விதிமுறைகளை வகுக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளாா்.

இந்து முன்னணியினா் கைது

இருமுடி விழா முன்னேற்பாடுகளுக்கான ஆய்வு கூட்டம்

சிறுமியைத் திருமணம் செய்த இளைஞா் மீது வழக்கு

காஞ்சிபுரம் ஏகாம்பரநாதா் கோயிலில் இன்று கும்பாபிஷேகம்: பலத்த போலீஸ் பாதுகாப்பு!

இந்து முன்னணியினா் ஆா்ப்பாட்டம் முயற்சி: 47 போ் கைது

SCROLL FOR NEXT