சாலைப் பாதுகாப்பு விழா
திருவள்ளூர், ஜன. 8: திருவள்ளூரை அடுத்த ஸ்ரீவெங்கடேஸ்வரா அறிவியல் மற்றும் தொழில் நுட்பக் கல்லூரியில் சாலைபாதுகாப்பு வார நிறைவு விழா வெள்ளிக்கிழமை கல்லூரியின் நிறுவனத் தலைவர் வெங்கடேசன் தலைமையில் நடைபெ
திருவள்ளூர், ஜன. 8: திருவள்ளூரை அடுத்த ஸ்ரீவெங்கடேஸ்வரா அறிவியல் மற்றும் தொழில் நுட்பக் கல்லூரியில் சாலைபாதுகாப்பு வார நிறைவு விழா வெள்ளிக்கிழமை கல்லூரியின் நிறுவனத் தலைவர் வெங்கடேசன் தலைமையில் நடைபெற்றது.
வட்டாரப் போக்குவரத்து அலுவலர் கந்தசாமி வரவேற்றார். கல்லூரியின் முதல்வர் தங்கவேல் முன்னிலை வகித்தார். இதில் வட்டாரப் போக்குவரத்து ஆய்வாளர் ஜெயபாஸ்கர் உரையாற்றும் போது, ஆண்டு தோறும் சாலை பாதுகாப்பு வார விழா வட்டாரப் போக்குவரத்து அலுவலகம் சார்பில் நடத்தப்படுகிறது.
இந்த ஆண்டு 1-ம் தேதி துவங்கிய சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு வார விழாவை வட்டாரப் போக்குவரத்து அலுவலகம், தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் மற்றும் வெங்கடேஸ்வரா கல்லூரி ஆகியவை இணைந்து நடத்தியது. இதையொட்டி பல்வேறு விழிப்புணர்வு பேரணிகள், சாலையில் செல்லும் வாகன ஓட்டிகளுக்கு துண்டு பிரசுரம், நகரத்தின் முக்கிய பகுதியில் விழிப்புணர்வு பேனர்கள் வைப்பது, இலவச கண் சிகிச்சை முகாம் ஆகியவை சிறப்பாக நடைபெற்றது.
சாலை விபத்துக்களை தடுக்கும் நோக்கில் நடத்தப்படும் இந்த விழிப்புணர்வு பிரச்சாரங்கள் மூலம் பெருமளவு விபத்துக்கள் குறைவதுடன், வாகன ஓட்டிகள் சாலை விதிகளையும் மதிக்க வேண்டும் என்றார். தொடர்ந்து சாலை பாதுகாப்பு குறித்து விளக்க படங்கள் கொண்ட கையேடு வெளியிடப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் நாட்டு நலப்பணி திட்ட அலுவலர் வெங்கடேசன், உடல்கல்வித் துறை இயக்குநர் செந்தில்பிரபு, பேராசிரியர் ராம்குமார் ஆகிய ஏராளமானோர் பங்கேற்றனர். கல்லூரியின் இயக்குநர் ஆனந்தகுமார் நன்றி கூறினார்.