சேதமடைந்த சாலை: எம்எல்ஏவை சூழ்ந்த பொதுமக்கள்
காஞ்சிபுரம், ஜன. 8: திருப்பருத்திக்குன்றம் பகுதியில் சேதமடைந்த சாலைகளை சரிசெய்ய வலியுறுத்தி காஞ்சிபுரம் எம்எல்ஏவை சூழ்ந்து கொண்டு பொதுமக்கள் வலியுறுத்தினர். இதனால் அப் பகுதியில் திடீர் பரபரப்பு ஏற்பட்
காஞ்சிபுரம், ஜன. 8: திருப்பருத்திக்குன்றம் பகுதியில் சேதமடைந்த சாலைகளை சரிசெய்ய வலியுறுத்தி காஞ்சிபுரம் எம்எல்ஏவை சூழ்ந்து கொண்டு பொதுமக்கள் வலியுறுத்தினர். இதனால் அப் பகுதியில் திடீர் பரபரப்பு ஏற்பட்டது.
காஞ்சிபுரம் எம்எல்ஏ சக்தி பெ.கமலாம்பாள் சொந்த வேலையாக திருப்பருத்திக்குன்றம் சாலை வழியாகச் சென்றார். அப்போது சேதமடைந்த சிறு பாலத்தின்கீழ் மரக் கட்டைகள் போடப்பட்டிருந்தன. அப்போது அங்கு அவர் காரை நிறுத்தியபோது அப் பகுதி மக்கள் திடீரென்று சூழ்ந்து கொண்டனர்.
மணல் லாரிகளால் இச் சாலை சேதமடைந்துவிட்டதாகவும், பாலங்கள் உடைந்து விட்டதாகவும், இதனை சரி செய்ய உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினர். அவரை பொதுமக்கள் திடீரென்று சூழ்ந்து கொண்டதால் பாதுகாப்பு கருதி அப் பகுதிக்கு போலீஸôர் வரவழைக்கப்பட்டனர்.
இதைத் தொடர்ந்து நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகளை வரவழைத்து எம்எல்ஏ சக்தி பெ.கமலாம்பாளர்
பேச்சுவார்த்தை நடத்தினார். சேதமடைந்த சாலைகளை உடனடியாக சரி செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
அப் பகுதியில் மண் கொட்டி உடனடியாக தற்காலிகமாக சரி செய்யப்படும் என்று அதிகாரிகள் உறுதி அளித்தனர். பின்னர் துணை வட்டாட்சியர் சந்திரசேகரை வரவழைத்து பேச்சு வார்த்தை நடத்தினார். இச் சாலையை சீரமைப்பது தொடர்பாக ஒரு திட்ட அறிக்கை தயாரித்து உரிய அதிகாரிகளுக்கு அனுப்பும் படியும் வலியுறுத்தினார். இச் சாலையை சீரமைக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியதைத் தொடர்ந்து பொதுமக்கள் கலைந்து சென்றனர்.